தமிழகத்தில் அரசின் கல்வித் தொலைக்காட்சியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விபரங்கள்!

0
தமிழகத்தில் அரசின் கல்வித் தொலைக்காட்சியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விபரங்கள்!
தமிழகத்தில் அரசின் கல்வித் தொலைக்காட்சியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விபரங்கள்!
தமிழகத்தில் அரசின் கல்வித் தொலைக்காட்சியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விபரங்கள்!

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. தற்போது இந்த கல்வித் தொலைக்காட்சிக்குரிய CEO பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த ஆன்லைன் வகுப்புகள் கணினி மற்றும் ஸ்மார்ட் மொபைல் உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இத்தகைய உபகரணங்கள் வசதி குறைந்த அரசு பள்ளி மாணவர்களின் வீட்டில் இருப்பது என்பது அரிதான ஒன்று. ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து இருந்தது.

TNPSC Group 2, 2A தேர்வெழுதியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – Cut-Off எவ்வளவு தெரியுமா?

அதனால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வது மிகவும் கடினமானதாக இருந்த நிலையில் தங்களின் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன்களை வாங்கி கொடுக்க முடியாத நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டனர். மேலும் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு இன்டர்நெட் சேவைகள் ஏதும் சரியாக கிடைக்காமல் அவர்களாலும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த சமயத்தில் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மிகவும் உதவியாக இருந்தது. இதனை தமிழக அரசு சார்பில் கடந்த 2019ம் ஆண்டு கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இதில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து பாடங்களும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா கால கட்டத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு பேருதவியாக இருந்த கல்வி தொலைக்காட்சியில் தற்போது CEO பணியிடம் காலியாக உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 5 முதல் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!