நெருங்கும் லோக்சபா தேர்தல் – அரசு ஊழியர்கள் திடீர் ட்விஸ்ட்

0
நெருங்கும் லோக்சபா தேர்தல் - அரசு ஊழியர்கள் திடீர் ட்விஸ்ட்

தமிழகத்தில் தேர்தல் பணி வேண்டாம் என 3000 பேர் விலக்கு கோரி விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தேர்தல் பணி

தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு நான்கு அலுவலர்கள் வீதம் இவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதிகமான வாக்காளர்கள் உள்ள வாக்குசாவடிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகள் தனியாக பிரிக்கப்பட்டு கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

தமிழக அரசின் ஆசிரியராக வேண்டுமா? – உங்களுக்கான முக்கிய தகவல்!

மேலும் 20 சதவீத ஊழியர்கள் ரிசர்வ் அடிப்படையில் தயார் நிலையில் இருப்பில் வைக்கப்பட்டிருப்பார்கள். இதுவரை 15 ஆயிரத்து 806 ஊழியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் மருத்துவ காரணங்களால் தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் முறையிட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய கூட்டுறவு துறை இணை பதிவாளர் பழனிசாமி, நோடல் ஆபீசராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 3000க்கு மேற்பட்டவர்கள் தேர்தல் பணியே வேண்டாம் என கடிதம் கொடுத்துள்ளனர். அதில் 2000 பேருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!