தமிழகத்தில் எங்கெல்லாம் ஊரடங்கு தளரும்? எவையெல்லாம் செயல்படும்? 

0

தமிழகத்தில் எங்கெல்லாம் ஊரடங்கு தளரும்? எவையெல்லாம் செயல்படும்? 

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் தொடரும் என்பதை பார்ப்போம்.

ஊரடங்கு தளர்வு பகுதியில் எவையெல்லாம் இயங்கும்..!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் 411 பேர் குணமடைந்து உள்ளனர் கொரோனா காரணமாக 15 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனவை அடியோடு கொல்லும் கிருமிநாசினி தயாரிப்பு – அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அசத்தல்..!

இன்று முதல் கொரோனா பரவல் குறைவாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். ஹாட் ஸ்பாட் பகுதிகளில் கட்டுப்பாடுகள் மே 3 வரை தொடரும். அதேபோல் சில சேவைகளுக்கும் பணிகளுக்கும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். விலக்கு அளிக்கப்படும் சேவைகள் மற்றும் துறைகள் முறையாக தனி மனித விலகலை கடைபிடித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

20ம் தேதிக்கு பின் செயல்படும் துறைகள்..!
  • அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்களை வழங்கும்
  • தனியார் நிறுவனங்கள், கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றும் நிறுவனங்கள் செயல்படும்.
  • அனைத்து விதமான விவசாய துறை நிறுவனங்களும் செயல்படும், அதாவது விவசாய உற்பத்தி, விற்பனை, விவசாய பொருட்களை பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்வது தொடரும்.
  • தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்கள் அதிகபட்சம் 50 சதவீத தொழிலாளர்கள் உடன் செயல்படும்.
  • பால் பொருட்களை பதப்படுத்துதல், பேக்கேஜிங், விநியோகம் அனுமதிக்கப்படும்.
    கால்நடை வளர்ப்பு பண்ணைகள், கோழி பண்ணைகள், முட்டை உற்பத்தி நிலையம் அனுமதிக்கப்படும்.
  • கால் நடை தீவன உற்பத்தி அனுமதிக்கப்படும்.
  • ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் காப்பகம் செயல்படும்.
  • டிபிடி பணப் பரிமாற்றங்கள் வழங்கப்படும் வரை சாதாரண வேலை நேரத்தின்படி வங்கி கிளைகள் இயங்கும்.
  • இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இயங்கும்.
  • பராமரிப்பு இல்லங்கள், சிறார்களுக்கு பாதுகாப்பு இடங்கள், குழந்தைகள் காப்பகங்கள் இயங்கும்.
  • சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களை வழங்குதல், EPFO வின் வருங்கால வைப்பு நிதி சேவைகள் செயல்படும்.
  • 15 நாட்களுக்கு ஒரு முறை உணவுப் பொருட்களை விநியோகிக்க அங்கன்வாடிகள் செயல்படும்.
  • பயனாளிகள் அங்கன்வாடிகளுக்கு செல்ல கூடாது, பொருட்களை வீட்டிற்கே கொண்டு செல்ல வேண்டும்.
  • ஆன்லைன் மூலம் கற்பித்தல் / தொலைதூர கற்றல் செயல்படும் MNREGA எப்போதும் போல செயல்படும்
  • ஆயுஷ் உட்பட அனைத்து மருத்துவ சேவைகளும் செயல்படும்.
  • மீன்பிடித்தல், கடல், உள்நாட்டு, மீன்வளத் தொழில் செயல்படும்.
  • மத்திய, மாநில துறை நீர்ப்பாசன திட்டங்கள் எப்போதும் போல செயல்படும்.
  • எண்ணெய் மற்றும் எரிவாயு துறை செயல்படும்
  • அஞ்சல் சேவைகள் செயல்படும்.
  • அனுமதிக்கப்படும் வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள்..!
  • ஐடி மற்றும் ஐடி தொடர்பான சேவைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்.
  • அச்சு, மின்னணு ஊடகம், தொலைக்காட்சி ஒளிபரப்பு, டி.டி.எச், கேபிள் சேவைகள் இயங்கும்.
  • அரசாங்க நடவடிக்கைகளுக்கு மட்டுமே டேட்டா மற்றும் கால் சென்டர் மையங்கள் செயல்படும்.
  • கிராம பஞ்சாயத்து அளவில் பொது சேவை மையங்கள் செயல்படும்.
  • இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்படும் அனுமதி பெற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களின் வாகனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கூரியர் சேவைகள் செயல்படும் துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றின் கிடங்கு சேவைகள் செயல்படும்.
  • அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களை பாதுகாப்பதற்காக தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களை சேவைகள் செயல்படும்.
  • சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் ஹோட்டல்கள், ஹோம் ஸ்டே, லாட்ஜ்கள், மோட்டல்கள் இயங்கும்
ஏப்ரல் 20 க்குப் பிறகு மே 3 வரை அனுமதிக்கப்படாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள்..!
  • மருத்துவ காரணங்கள், பாதுகாப்பு நோக்கங்கள் தவிர உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணம் செயல்படாது.
  • ரயில்கள் இயங்காது.
  • பொது போக்குவரத்துக்கான பேருந்துகள் இயங்காது.
  • மெட்ரோ ரயில் இயங்காது.
  • மருத்துவ காரணங்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட சேவைகள் தவிர மற்ற பணிகளுக்காக மாநிலங்களுக்கு இடையேயான, மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் அனுமதிக்கப்படாது.
  • அனைத்து கல்வி பயிற்சி, பயிற்சி நிறுவனங்களும் செயல்படாது.
  • அரசின் பட்டியலில் இல்லாத தொழில்துறை மற்றும் வணிக சேவைகள் செயல்பட முடியாது.
  • அரசின் பட்டியலில் இல்லாத ஹோட்டல், லாட்ஜ் சேவைகள் செயல்படாது.
  • டாக்சிகள், ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்‌ஷாக்கள் செயல்படாது.
  • சினிமா அரங்குகள், மால்கள், வணிக மையங்கள், ஜிம்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள், தியேட்டர்கள், சட்டசபை அரங்குகள், ஆடிட்டோரியங்கள் செயல்படாது.
  • சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மத நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது.
  • 20 பேருக்கு மேல் இல்லாத இறுதிச் சடங்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்..!
  • புகையிலை, குட்கா, மதுபான விற்பனைக்கு தடை பொது இடங்களில் எச்சில் துப்புதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • தனி மனித இடைவெளியுடன் கிராமப்புறங்களில் உள்ள தொழில்கள் அனுமதிக்கப்படும்.
  • இறுதி சடங்குகள் மற்றும் திருமணங்களில் கூட்டங்கள் கண்காணிக்கப்படும்.
  • மாஸ்க் அணிவது, முகத்தை மறைப்பது கட்டாயம் ஆகும்.
  • தொழில் நிறுவனங்கள் கட்டாய ஸ்கிரீனிங் நடத்த வேண்டும். மேலும் ஷிப்டுகள் மற்றும் மதிய உணவு இடைவேளையின் இடையே 1 மணிநேர இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் ஹாட் ஸ்பாட் பகுதிகள்..!
  • தமிழகத்தில் 22 மாவட்டங்கள், அதாவது சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் மண்டலங்களாக மத்திய அரசால் தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் 22ம் தேதி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கொரோனாவுக்கு வந்தாச்சு தடுப்பு மருந்து – அமெரிக்கா மருத்துவ குழு அதிரடி.!
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!