தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம்!

0
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை மையம்!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை மையம்!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம்!

குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ (1.5 கிலோமீட்டர்‌ உயரத்தில்‌) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்பசலனத்தின்‌ காரணமாக

07.07.2021: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, வேலூர்‌, ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்கள்‌ மற்றும்‌ உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

ஜூலை 12 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி – பீகார் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்!

08.07.2021: திருவள்ளூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்கள்‌ மற்றும்‌ உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

09.07.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழகத்தில் மீண்டும் சுற்றுலா தலங்கள் மூடல் – கொரோனா விதிமுறைகள் மீறல்!

தென்‌ மேற்கு பருவமழை தீவிரமடைவதன்‌ காரணமாக 10.07.2021 மற்றும்‌ 11.07.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌ தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல மிக கன மழையும்‌, திண்டுக்கல்‌ மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, ராணிப்பேட்டை, சென்னை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

குறிப்பு: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில்‌ பலத்த காற்றுடன்‌ கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாலும்‌, மலைப்பகுதிகளில்‌ மண்சரிவு ஏற்படக்கூடும்‌ என்பதனாலும்‌ பொதுமக்கள்‌ மலை ஏற்றத்தை தவிர்க்கவும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்இற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ இல பகுதிகளில்‌ மாலை அல்லது இரவு நேரங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்‌: 09.07.2021 முதல்‌ 11.07.2021 வரை: குமரிக்கடல்‌, மன்னார்‌ வளைகுடா, மாலத்தீவு மற்றும்‌ அதனை ஓட்டிய தமிழ்நாட்டின்‌ கடலோரப் பகுதிகள்‌, மத்திய மேற்கு வங்கக்கடலை ஓட்டிய ஆந்‌திர கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌: 08.07.2021 முதல்‌ 11.07.2021 வரை தென்‌ இழக்கு அரபிக்கடல்‌, கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ லட்சத்‌தீவு பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்துலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் புதிய நடைமுறைகள் – ஆணையர் அறிவுறுத்தல்!

07.07.2021 முதல்‌ 11.07.2021 வரை தென்‌மேற்கு, மத்‌திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ மேற்குறிப்பிட்ட தேதிகளில்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!