தமிழ் இணைய கல்விக்கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜன.10ம் தேதி கடைசி நாள்!

0
தமிழ் இணைய கல்விக்கழகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜன.10ம் தேதி கடைசி நாள்!
தமிழ் இணைய கல்விக்கழகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜன.10ம் தேதி கடைசி நாள்!
தமிழ் இணைய கல்விக்கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜன.10ம் தேதி கடைசி நாள்!

தமிழ் நாடு அரசின் தகவல் தொழிநுட்ப துறையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான தமிழ் இணையக்கல்வி கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு வேலை:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழ் நாடு அரசின் தகவல் தொழிநுட்ப துறையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான தமிழ் இணையக்கல்வி கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இணையவழியில் உலகெங்கிலும் உள்ள தமிழ் கற்க ஆர்வம் உள்ளவர்களுக்கு தமிழக அரசின் இணையக்கல்வி கழகத்தின் வாயிலாக தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.

Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டங்கள் – வட்டி விகிதம், மாதாந்திர வருமானம் & முழு விபரங்கள் இதோ!

மேலும் தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கும் இணைய வழியில் தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான விவரங்களை தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கி வருகிறது. அந்த வகையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள தமிழ் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் மொழி கற்றுக்கொடுக்க தகுதியான ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தமிழ் மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் தமிழ் மொழியை மாணவர்களுக்கு அவர்களுக்கு தெரிந்த மொழியில் அதாவது ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் கற்பிக்க தெரிந்திருக்க வேண்டும். இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஆசிரியர்கள் மற்றும் தகுதியான இளைஞர்களின் விவரங்கள் பெறப்படும்.

இந்தியாவில் ஓமைக்ரான் பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்? அச்சத்தில் மக்கள்!

பின்னர் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணைய தளத்தில் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் தேர்வு செய்யப்பட்டவர்கள் தமிழ் இணையக்கல்வி கழகத்தின் மூலம் தமிழ் கற்பிக்க உட்படுத்தப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tamilvu.org/eteach_reg/ என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து வரும் ஜன.10ம் தேதிக்குள் உள்ளீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான ஊதியம் வகுப்புகளின் கால அளவிற்கு ஏற்றாற்போல் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விபரங்கள் அறிய இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை – 25, தொலைபேசி எண் : 044- 2220 9414. என்ற முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!