விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” முதல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" முதல் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" வரை - ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” முதல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

தமிழ் சின்னத்திரை சீரியல்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ள நிலையில், அதில் பிரபலமான சீரியல்களில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ரசிகர்களின் கமெண்ட்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

டாப் கமெண்ட்ஸ்:

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் சீரியல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் எத்தனை சீரியல்கள் இருந்தாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே மக்களுக்கு பிடித்தமான சீரியலாக இருக்கிறது. இந்நிலையில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கண்ணனை விட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டுள்ளது. அம்மாவின் அஸ்தியை கரைக்க கூட கண்ணனை விட்டு சென்று விடுகின்றனர். இந்நிலையில் அஸ்தி கரைத்து வந்தவர்கள் சாப்பிட்டு தான் செல்ல வேண்டும் என ஊர் பெரியவர் சொல்கிறார். கண்ணன் வந்து உக்கார மூர்த்தி எழுந்து விடுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஆமா வீடு பாத்து கொடுத்து, மளிகை சாமான் வீட்டுக்கு அனுப்பி வைத்து, வேலை வாங்கி கொடுத்து எல்லாம் பண்ணுவாங்களாம், ஆனா கண்ணனை வீட்டில மட்டும் சேத்துக்க மாட்டாங்களாம் என கூறியள்ளார்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகர் – சூடுபிடிக்கும் கதைக்களம்!

மற்றொரு ரசிகர் கண்ணன் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு இந்த ஒற்றுமையான அண்ணன் தம்பிகளை பிரிக்க நினைக்கும் மற்ற வெளி சொந்தங்கள்!! இப்ப என் தம்பிகள் தான் என் உலகம் சொன்ன மூர்த்தி என்ன செய்வாரோ!! போலி உறவுகள் உண்மையான உறவுகளை இப்படித்தான் பிரிக்கப் பார்க்கும்… என கூறிள்ளார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா தன் இரட்டை குழந்தை பற்றி கவலைப்பட்டு அழுது புலம்பும்படி ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதி பைத்தியமா மாறிடுவான் கண்ணம்மா அவன பாத்துக்குவா இதான நடக்க போகுது அட போங்கப்பா என்று கூறியுள்ளார். ரொம்ப இழுவையா போய்கிட்டு இருக்கு லாஸ்ட்டா மொக்கையாக முடிக்க போறீங்க என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியல் ரொம்ப போர் அடிப்பதாகவே பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு ரசிகர் பாரதியை விட பெட்டர் ஆள் பின்னாடி வெண்பா சுற்றுவது போல் கொண்டு போங்க கதையை என கூறியுள்ளார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு பெரிய சமையல் ஆர்டர் வந்துள்ளது. அதை அனைவரும் செய்ய முடியாது என சொல்லி கேலி செய்கின்றனர். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஏன் எப்படி போனாலும் பாக்கியா அம்மாவுக்கு எதிராக இருக்கீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க நீங்க தைரியமா பண்ணுங்க பாத்துக்கலாம் என்று கூறியுள்ளார்.

நாக சைதன்யா, சமந்தா விவாகரத்து பிரச்சனை – முதன்முறையாக மனம் திறந்த நடிகர்!

மேலும் ஒரு ரசிகர் எப்போதான் பாக்கியாவை தைரியமான பொண்ணா காட்டூவீங்க ரொம்ப போர் அடிக்குது என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பெண்களை சீரியலில் தைரியமாக காட்டுங்கள் ஊக்கப்படுத்துங்கள் என்றே பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில், அர்ச்சனாவுக்கு நாளைக்கு பிறந்தநாள் என்பதால் படத்திற்கு அழைத்து செல்ல இருப்பதாக செந்தில் கூறுகிறார். இதுகுறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ச்சனா எவ்ளோ பெரிய தப்பு பண்ணாலும் உங்களுக்கு சாதாரணம் தான் போல என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாட்டு எல்லாம் பலமா இருக்கு அப்போ அடுத்து ஏதாவது சண்டை இருக்கா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியே அர்ச்சனாவுக்கு இடம் கொடுங்க கடைசியில் அனுபவிப்பீங்க என்று கூறியுள்ளார்.

ரோஜா

ரோஜா சீரியலில், செண்பகத்தை பார்க்க அவரது கணவர் மாணிக்கம் வருகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இந்த ப்ரோமோவை பாத்த ரசிகர் ஒருவர் இந்த கதையில் அணு போலி என்பது செண்பகத்துக்கு நல்லாவே தெரிந்துவிட்டது.கதையில் செண்பகத்துக்கு பழைய நினைவுகள் திரும்பி வர நீண்ட நாட்கள் ஆக்கிடுவாங்க என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செண்பகத்தின் தர்மசங்கடமான. நிலை பாவம். சீக்கிரமே பழைய நினைவுகள் வந்தால் ‌ நல்லா இருக்குமே என கூறியுள்ளார். மாணிக்கத்தை உங்களை யாருனே தெரியலைன்னு நல்லா அலைய வைக்கனும் செண்பகம் அம்மா என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் செண்பகத்துக்கு பழைய நினைவுகள் வரவேண்டும் என்றே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!