சின்னத்திரையில் டாப் ஹீரோவிற்கு ஏற்பட்ட விபத்து – வெளியான புகைப்படம்! ரசிகர்கள் ஆறுதல்!
தமிழ் சின்னத்திரையில் டாப் ஹீரோவான விஷ்ணு தற்போது சத்யா சீரியலுக்கு பின் எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு இடுப்பில் அடிபட்டு இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
விஷ்ணு:
சின்னத்திரையில் பல வெற்றி சீரியல்களில் கதாநாயகனாக நடித்து பல ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் விஷ்ணு. அவர் சமீபத்தில் ஜீ தமிழில் சத்யா 2 சீரியலில் நடித்து வந்தார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது முழு பங்களிப்பையும் கொடுத்து அவர் நடித்து வருவதால் அந்த கதாபாத்திரத்தில் அவர் கட்சிதமாக பொருந்தி இருக்கிறார். அதனால் அவருடைய சீரியல் பார்க்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.
நான் பண்ணது மகா தப்பு.. பல மாதங்கள் கழித்து மௌனம் கலைந்த விஜய் டிவி பிரியங்கா – ரசிகர்கள் ஷாக்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் சத்யா 2 சீரியல் முடிந்துள்ள நிலையில், இன்னும் எந்த புது சீரியலிலும் விஷ்ணு கமிட் ஆகாமல் இருக்கிறார். தற்போது அவருக்கு இடுப்பில் எதோ அடிபட்டு இருப்பதாகவும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருவதாகவும் புகைப்படத்துடன் அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அவர் இனி எந்த சேனலில் எந்த சீரியலில் கமிட்டாக இருக்கிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.