தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

தென்‌ மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தமிழக கடலோர பகுதிகளில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, சேலம்‌,திருவண்ணாமலை, கடலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிக கன மழையும்‌, தென்‌ மாவட்டங்கள்‌, டெல்டா (தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌) காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, நாமக்கல்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

அரசு இசை கல்லூரியில் மாணவர் சேர்க்கை, விண்ணப்பங்கள் வரவேற்பு – ஆட்சியர் அறிவிப்பு!

06.10.2021: நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, தர்மபுரி, சேலம்‌, தேனி, திண்டுக்கல்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

07.10.2021: வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்ய கூடும்‌.

ஆதார் கார்டில் முகவரியை மாற்றம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் கீழே!

08.10.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய கூடும்‌.

09.10.2021: வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌ மற்றும்‌ காஞ்சிபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, வட மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ பெரும்பாலான பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ அவ்வப்போது கன மழையும்‌ பெய்யக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்‌ கடல்‌ பகுதிகள்

05.10.2021: தமிழக கடற்கரை ஒட்டிய தென்‌ மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

IPL 2021 : பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?  RR vs MI இன்று மோதல்!!

08.10.2021: மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here