ஆதார் கார்டில் முகவரியை மாற்றம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் கீழே!
வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது குறித்த எளிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.
ஆதார் கார்டு:
இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விபரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI பல சேவைகளை வழங்கி வருகிறது.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – விரைவில் ஒப்புதல்! WHO இன்று ஆலோசனை!
தற்போது வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது குறித்து குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பயனர்கள் ஆதாரின் அதிகாரபூர்வ இணையதளமான uidai.gov.in என்ற இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும். அதன்பின் அதில் Update Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் Update Your Address Online என்பதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கொண்ட மொபைல் கையில் வைத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் அக்டோபர் 14ம் தேதி ஆயுத பூஜை – மஞ்சள் சந்தைக்கு 6 நாட்கள் விடுமுறை!
தற்போது புதிதாக ஓபன் ஆகும் பக்கத்தில் மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். பின்னர் Get OTP என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் மொபைல் நம்பரை பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும். Address Update என்பதில் உள்நுழைந்து முகவரி குறித்த விவரங்களை பதிவிட வேண்டும். அதனை தொடர்ந்து தேவையான ஆதாரங்களை பதிவேற்றம் செய்து பின்னர் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் வழங்கப்படும் ரெபெரென்ஸ் நம்பர் மூலம் பயனர்கள் ஆதாரை ட்ராக் செய்து கொள்ளலாம்.
Please update address change
Address change