IPL 2021 : பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?  RR vs MI இன்று மோதல்!!

0
IPL 2021 பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்  RR vs MI இன்று மோதல்!!
IPL 2021 பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்  RR vs MI இன்று மோதல்!!

IPL 2021 : பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?  RR vs MI இன்று மோதல்!!

ஐபிஎல்லில் இன்று நடைபெறவுள்ள 51வது லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரிட்சையில் இறங்க உள்ளன. இந்த இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்த அலசலை இங்கு காணலாம்.

RR vs MI இன்று மோதல்:

தற்போது நடைபெறு வரும் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே சென்னை, டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் அடுத்தகட்ட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் எஞ்சியுள்ள ஒரு இடத்திற்கான போட்டியில் ராஜஸ்தான், மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது அதில் இரு அணிகளான ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன.

IPL 2021 – DC vs CSK: சென்னையை வீழ்த்தி முதலிடம் பிடித்த டெல்லி அணி!

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 வெற்றியுடன் 7வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரு போட்டியில் நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியான நிலையில் உள்ளது. பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அதிக தவறுகளையும் சொதப்பல்களையும் சந்தித்து வருகிறது. பவுலிங் மட்டுமே சற்று ஆறுதல் அளிக்கிறது. எதிரணியை குறைவான ஸ்கோரில் சுருட்டினாலும், அதனை சேஸ் செய்வதில் அதிக தடுமாற்றம் ஏற்படுகிறது. பேட்டிங்கில் அனைவரும் பழைய அதிரடி பார்மிற்கு திரும்பினால் மட்டுமே வலுவான ஸ்கோரினை குவிக்க முடியும்.

ராஜஸ்தான் அணி முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் படையுடன் களமிறங்கி வருகிறது. சொதப்பலுடன் ஆடிய ராஜஸ்தான் அணி கடந்த போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 190 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டி பிடித்தது. இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், சிவம் துபே ஆகியோர் அதிரடியில் வெளுத்து வாங்கினர். இந்த வெற்றியின் மூலம் பெரிய உத்வேகத்துடன் உள்ளது ராஜஸ்தான் அணி. பேட்டிங்கில் அசுர பலத்துடன் விளங்குவதாக தென்படுகிறது. இதனை இன்றைய போட்டியிலும் தொடர்ந்தால் வெற்றி பெறலாம். ஆனால் பவுலிங் மற்றும் பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

இதற்கு முன்னர் இரு அணிகளும் மோதிய போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு ராஜஸ்தான் பழி தீர்த்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 14 முறையும், ராஜஸ்தான் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

உத்தேச வீரர்கள் விவரம்:
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (c & wk), சிவம் துபே, க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் தேவாடியா, மயங்க் மார்கண்டே, சேத்தன் சகாரியா, கார்த்திக் தியாகி/ஆகாஷ் தியாகி, முஸ்தாபிஜூர் ரஹ்மான்
  • மும்பை இந்தியன்ஸ் – ரோகித் சர்மா (சி), குயின்டன் டி காக் (வாரா), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, கீரன் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல், ராகுல் சாஹர்/ஜெயந்த் யாதவ், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!