தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!

லட்சத்தீவு மற்றும்‌ அதனை ஒட்டியுள்ள பகுதிகளில்‌ (1.5 கிலோமீட்டர்‌ உயரம் வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக இன்று கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர்‌, ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, மதுரை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, தென்‌ மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ உள்‌ மாவட்டங்களில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

24.10.2021: சேலம்‌, மதுரை ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர்‌, புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ உள்‌ மாவட்டங்களில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

11ம் வகுப்பு தேர்வு அக்.27ம் தேதி தொடக்கம் – மாநில கல்வித்துறை அறிவிப்பு!

25.10.2021: புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, விருதுநகர்‌, மதுரை, திருச்சராப்பள்ளி, விழுப்புரம்‌, கடலூர்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

26.10.2021, 27.10.2021: மதுரை, சிவகங்கை, விருதுநகர்‌, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழக அரசு ஊழியர்களுக்கு காலாண்டு, அரையாண்டு & மே மாத விடுமுறை படி – முக்கிய அறிவிப்பு!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்‌ கடல்‌ பகுதிகள்‌:

26.10.2021, 27.10.2021: மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள் :

23.10.2021, 24.10.2021: கேரள கடல்‌ பகுதி மற்றும்‌ அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ அவ்வப்போது 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!