தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக கனமழை கொட்டி தீர்க்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

03.11.2021: லட்சத்தீவு மற்றும்‌ தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதியில்‌ நிலவும்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும்‌ தென்‌ தமிழகத்தை ஒட்டி நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக (ஆரஞ்சு எச்சரிக்கை) டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ கடலூர்‌, புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, விழுப்புரம்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சராப்பள்ளி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவள்ளூர்‌, மதுரை, சேலம்‌ கோயம்புத்தூர்‌, நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

நவ.15ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு – தேவஸ்தானம் அறிவிப்பு!

04.11.2021: டெல்டா மாவட்டங்கள்‌, சேலம்‌, நாமக்கல்‌, ஈரோடு, கரூர்‌, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்‌, நீலகிரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

05.11.2021: டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, சேலம்‌, திருச்சராப்பள்ளி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, வடமாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌
அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழகத்தில் 10 நாட்கள் தீபாவளி விடுமுறை – சங்க கூட்டமைப்பின் அறிவிப்பு வெளியீடு!

06.11.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌, சேலம்‌, ஈரோடு, கரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌
மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

07.11.2021: தென்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

03.11.2021 முதல்‌ 05.11.2021 வரை: கேரள கடலோரப்‌ பகுதிகள்‌, லட்சத்தீவு, மற்றும்‌ தென்கிழக்கு அரபிக்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 5௦ கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

06.11.2021, 07.11.2021: தென்‌ கிழக்கு அரபிக்‌ கடல்‌, வடக்கு கேரளா மற்றும்‌ கர்நாடக கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!