தமிழகத்தில் 10 நாட்கள் தீபாவளி விடுமுறை – சங்க கூட்டமைப்பின் அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் 10 நாட்கள் தீபாவளி விடுமுறை - சங்க கூட்டமைப்பின் அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 10 நாட்கள் தீபாவளி விடுமுறை - சங்க கூட்டமைப்பின் அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 10 நாட்கள் தீபாவளி விடுமுறை – சங்க கூட்டமைப்பின் அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில், 40,000 விசைத்தறிக்கு 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. நவம்பர் 15ம் தேதிக்கு பின்னர் முழுவதுமாக விசைத்தறிகள் இயங்கும் என்று தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை அறிவிப்பு:

தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடை வீதிகளுக்கு கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். கொரோனா தொற்று தற்போது தான் குறைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அதிகரிக்கலாம். அதனால் அரசு பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கடைகள் இயங்கும் நேரம் நீட்டிப்பு!

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து சேவையை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதால் முன்பதிவில்லாத ரயில்களும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே மக்கள் புத்தாடைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். அதனால் ஜவுளி உற்பத்திக்காக கடந்த நான்கு மாதங்கள் தொடர்ந்து இரவு, பகலாக விசைத்தறிகள் இயக்கப்பட்டது.

நவ.15ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு – தேவஸ்தானம் அறிவிப்பு!

அதனால் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசைத்தறி இயந்திரங்களுக்கும், நெசவாளர்களுக்கும் ஓய்வு அளிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 40,000 விசைத்தறிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசின் இலவச வேட்டி, சேலைகள் நெய்தல் பணி நடந்து வருகிறது. இதனால் விடுமுறைக்கு பின் 15ம் தேதி முதல் முழு அளவில் தறிகள் இயங்கும் என்று அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!