தமிழகத்தில் ஆகஸ்ட் 1 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் 1 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஆகஸ்ட் 1 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஆகஸ்ட் 1 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும்‌ வெப்பச் சலனம்‌ காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌, சேலம்‌, தென்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ டெல்டா மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலை நிலவக்‌ கூடும்‌.

29.07.2021 & 30.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ தென்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலை நிலவக்‌ கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

31.07.2021 & 01.08.2021 வரை: கடலோர மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலை நிலவக்‌கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும்‌, அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்‌:

28.07.2021 முதல்‌ 29.07.2021வரை: வடமேற்கு மற்றும்‌ மத்திய வங்கக்‌ கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அமைச்சர் தகவல்!

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

28.07.2021 முதல்‌ 01.08.2021வரை: தென்‌ மேற்கு, வடக்கு மற்றும்‌ மத்திய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!