தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை – தரவரிசை பட்டியல் வெளியீடு!

0
தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை - தரவரிசை பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை - தரவரிசை பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை – தரவரிசை பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் 2023-ம் ஆண்டுக்கான மருத்துவ பட்ட மேற்படிப்புகளான MD, MS, DIPLOMA ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவு நடைபெற்றது. இதனையடுத்து தற்போது மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது .

தரவரிசை பட்டியல்:

இந்தியாவில் 2022 – 2023-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியானது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் இளங்கலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவு நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இன்று எம்.டி, எம்.எஸ் போன்ற மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இப்படி ஒரு திட்டமா? மாதம் ரூ.3,000 பெற எளிய வழிமுறைகள்!

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 16 சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ முதுநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா. சுப்ரமணியன் வெளியிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அரசு கல்லூரிகளில் 1162 இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளுக்கான நிர்வாக கல்லூரிகளில் 763 இடங்களும், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான அரசு கல்லூரிகளில் 31 இடங்களும் உள்ளது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சுயநிதி கல்லூரிகளில் 296 இடங்களும், தேசிய வாரிய பட்டபடிப்புகளில் 94 என மொத்தம் 2,346 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் உள்ளது. இந்த இடங்களுக்கு நேற்று வரை 21,183 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 12,429 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். மேலும் இன்று தொடங்கியுள்ள கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக அக்டோபர் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!