விவசாயிகளுக்கு இப்படி ஒரு திட்டமா? மாதம் ரூ.3,000 பெற எளிய வழிமுறைகள்!

0
விவசாயிகளுக்கு இப்படி ஒரு திட்டமா? மாதம் ரூ.3,000 பெற எளிய வழிமுறைகள்!
விவசாயிகளுக்கு இப்படி ஒரு திட்டமா? மாதம் ரூ.3,000 பெற எளிய வழிமுறைகள்!
விவசாயிகளுக்கு இப்படி ஒரு திட்டமா? மாதம் ரூ.3,000 பெற எளிய வழிமுறைகள்!

மத்திய அரசு மக்களின் நலனிற்காக வழங்கி வரும் பல திட்டங்களில் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்து பலரும் அறிந்து கொள்ளாமல் உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் பயனடையும் வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

விவசாயிகளுக்கு ஓய்வூதியம்:

மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் நலனிற்காக பல புதிய திட்டங்களை அமலுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகள் தொடர்ந்து வந்த கார்ப்பரேட்டுகளின் படையெடுப்பின் ஆதிக்கத்தால் நலிவடைந்து வந்தனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளது.

IBM, Infosys நிறுவனங்கள் வெளியிட்ட ஹாப்பி நியூஸ் – குஷியில் ஐடி ஊழியர்கள்!!

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.6,000 வழங்கப்படுகிறது. இதற்கு விவசாய நிலம் உள்ள அனைவரும் தகுதி உடையவர்களாக கருதப்படுகிகின்றனர். இதுவரை 11 தவணைக்கான நிதி விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. விரைவில் 12-ம் தவணை வழங்கப்பட உள்ளது. இதேபோல், வயது முதிர்ந்த விவசாயிகளின் நலனிற்காக ஓய்வூதிய திட்டமும் உள்ளது.

Exams Daily Mobile App Download

பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற பெயரில் உள்ள திட்டத்தில் 18 முதல் 40 வயதுடைய விவசாயிகள் அனைவரும் இணைந்து பலன் பெறலாம். தங்களது வயதிற்கு ஏற்ப அரசு நிர்ணயித்துள்ள மாத தவணையை 60 வயது வரை செலுத்த வேண்டும். விவசாயிகள் தங்கள் 60 வயது முதல் மாதம் ரூ. 3,000-ஐ ஓய்வூதியமாக பெறலாம். இந்த திட்டத்தில் இணைவதற்கு அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் வழியில் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பதிவுசெய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!