தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி கட்டணத்தில் சலுகை? அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி கட்டணத்தில் சலுகை? அரசாணை வெளியீடு!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி கட்டணத்தில் சலுகை? அரசாணை வெளியீடு!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி கட்டணத்தில் சலுகை? அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் சட்ட பேரவையில் அறிவித்த படி மாணவர்களின் உயர் கல்விக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள்:

தமிழகத்தில் 6 – 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன் பெற உள்ளனர். இத்திட்டம் மூலம் பெண்கள் தொடர்ந்து கல்வி பெற முடியும். அத்துடன் கல்வி இடைநிற்றல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி வங்கி கணக்கில் ரூ. 1000 உதவித் தொகை செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் துவக்க விழா செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் பங்கேற்கவுள்ளார். இந்த நிலையில் அடுத்த திட்டமாக அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் ஐஐடி, இந்திய அறிவியல் கழகம், எய்ம்ஸ் போன்ற புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தால் அவர்களின் இளநிலை பட்டப் படிப்புக்கான முழு செலவை அரசே ஏற்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாத வங்கி விடுமுறைக்கான முழு விவரங்கள் – பொதுமக்களின் கவனத்திற்கு!

ஏற்கனவே இத்திட்டம் குறித்து 2022 – 2023 ம் ஆண்டுக்கான நிதி அறிக்கையில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இளநிலைப் பட்டப்படிப்பு படிப்பதற்கான முழுச் செலவையும் வழங்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளும் இடம் பெற்றுள்ளது. இந்த திட்டத்தை கண்காணிக்கவும், சரிபார்த்தலை விரைவாக முடிக்கவும் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம் இணையதளம் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!