சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.176 அதிரடி சரிவு – மாலை நிலவரம்!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.176 அதிரடி சரிவு - மாலை நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.176 அதிரடி சரிவு - மாலை நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.176 அதிரடி சரிவு – மாலை நிலவரம்!

சென்னையில் தொடர்ந்து 3 ஆவது நாளாக வீழ்ச்சியடைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விற்பனை விலையானது இன்று (செப்டம்பர் 8) மாலை நிலவரத்தின் படி சவரனுக்கு ரூ.176 ஆக குறைந்து கடும் சரிவை கண்டுள்ளது.

தங்க நகை விற்பனை:

சமீபத்தில் துவங்கியுள்ள செப்டம்பர் மாதத்தின் முதல் நாள் துவங்கி தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37,000 ஐ நெருங்கி வந்த நிலையில், இம்மாத விற்பனையில் ஒரு சவரன் நகை ரூ.35,000 ஐ தொடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்படி நாளொன்றுக்கு ரூ.100 வரை வீழ்ச்சியடைந்து வரும் தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் சற்று உற்சாகத்துடன் நகைகளை வாங்கி செல்கின்றனர்.

ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால் இழப்பீட்டு தொகை – உச்ச நீதிமன்றம் அதிரடி!

இதனால் ஆபரணத் தங்கத்தின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 8) காலை துவங்கிய ஆபரணத் தங்கத்தின் விற்பனையில் ஒரு சவரன் நகையின் விலை ரூ.160 வரை வீழ்ச்சி கண்டு, ரூ.35,616க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே போல ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையும் ரூ.4,452க்கு விற்பனையானது.

தமிழக அரசு சார்பில் உதவித்தொகை & மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதை தொடர்ந்து இன்றைய (செப்டம்பர் 8) மாலை நேர நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டுமாக சவரனுக்கு ரூ.176 வரை குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.35,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,450 என விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் வரை உயர்ந்து ரூ.69.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!