தமிழக அரசு சார்பில் உதவித்தொகை & மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசு சார்பில் உதவித்தொகை & மானியம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு சார்பில் உதவித்தொகை & மானியம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு சார்பில் உதவித்தொகை & மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மூலம் உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்களை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கூறியுள்ளார்.

நரிக்குறவர் நல வாரியம்:

தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதையடுத்து மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மூலம் உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின்கீழ் விபத்து மரண உதவித்தொகை ரூ. 1 லட்சம், விபத்தினால் ஏற்படும் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, இயற்கை மரண உதவித்தொகை ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்கு செலவு உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

CA 2021 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – ICAI முக்கிய அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு படித்துவரும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1000, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.1000, பிளஸ் 1 படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1000, பிளஸ் 2 படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1500, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவருக்கு ரூ.1500, முறையான பட்டப் படிப்புக்கு ரூ.1500 என வழங்கப்படுகிறது. மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்டப்படிப்புக்கு ரூ.1750, முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.4 ஆயிரம், மாணவா் இல்ல வசதியுடன்கூடிய முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மேலும், தொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு ரூ. 4 ஆயிரம், மாணவா் இல்ல வசதியுடன்கூடிய தொழிற்கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.6 ஆயிரம், தொழிற்கல்வி பட்டப் மேற்படிப்புக்கு ரூ.6 ஆயிரம், மாணவா் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டமேற்படிப்புக்கு ரூ.8 ஆயிரம், ஐடிஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்புக்கு ரூ.1000, மாணவா் இல்லவசதியுடன்கூடிய ஐடிஐ(அ) பல்தொழில் பயிற்சி படிப்புக்கு ரூ.1200 வழங்கப்படுகிறது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாதம் ரூ.50 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.500, 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாதம் ரூ.100 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ. 2 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை மாதந்தோறும் ரூ. 1000 வீதம் 6 மாதங்களுக்கு ரூ. 6 ஆயிரம், கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரம், மூக்குக் கண்ணாடி செலவுத் தொகை ரூ.500, முதியோா் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். மேலும் தனிநபா் தொழில் தொடங்க முழு மானியம் ரூ.7,500, குழுவாகத் தொழில் தொடங்க மானியம் ரூ.10 ஆயிரம் தனிநபருக்கு (அல்லது) ரூ.1,25,000 அதிகபட்சமாக குழுவுக்கு வழங்கப்படும்.

India vs England T20 & ODI சீரிஸ் 2022 – அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு நரிக்குறவா் நலவாரிய உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, உறுப்பினராக அல்லாதவா்கள் தமிழ்நாடு நரிக்குறவா் நலவாரிய உறுப்பினராக சேர மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 3-ஆம் தளத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் உதவித்தொகையை பெற முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!