சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – கடும் அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - கடும் அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - கடும் அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – கடும் அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகையில் இன்றும் தங்க அதிரடியாக உயர்ந்து உள்ளது. இதனால் இனி தங்கம் வாங்க முடியாத சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய விலையேற்றம்:

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்கள் தங்க நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருவதற்கு முக்கிய காரணம், சிக்கலின் போது நமக்கு தங்கநகைகள் தான் கைகொடுக்கும் என்பதுதான். மேலும் உலக அளவிலான முதலீட்டாளர்களும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இருப்பினும் இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது.

அரசு அதிகாரிகள் புதிய கார்கள் வாங்க தடை – நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தான்!

கடந்த 10 நாட்களாக தினந்தோறும் விலை உயர்வதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சூழலில் தங்கம் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்களுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று (ஜூன் 11) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,835 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,775 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 38,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 480 ரூபாய் உயர்ந்து 38,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

நேற்று 5,174 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,234 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 41,392 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 490 ரூபாய் உயர்ந்து 41,872 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.67 ஆக இருந்தது. இன்று அது ரூ.67.50க்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

  • மும்பை – ரூ.4,786 , பெங்களூரு – ரூ.4,775 , ஹைதராபாத் – ரூ.4,775
  • கேரளாவில் – ரூ.4,780 , டெல்லியில் – .4,786 கொல்கத்தா – ரூ.4,775
  • ஒசூரில் – ரூ.4,779 , பாண்டிச்சேரியில் – ரூ.4,779 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!