சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

0
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 உயர்ந்துள்ளது. நேற்றை விட இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

தங்க விலை:

நாடு முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட தொழில் சரிவினால் முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தனர். இந்த நேரத்தில் ஏராளமானோர் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் அவ்வப்போது தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.

தமிழகத்தில் நாளை (பிப்.18) பள்ளிகளுக்கு விடுமுறை? முக்கிய அறிவிப்பு வெளியீடு!

மேலும் தங்கம் விலையானது காலை, மாலை என இரு வேளைகளிலும் மாற்றம் அடைகிறது. வழக்கமாக சுபமுகூர்த்த தினங்கள், பண்டிகை நாட்களில் தங்கம் விலை அதிகரிக்கும். இந்த நிலையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சரிவை சந்தித்தது. ஆனால் இன்று திடீரென தங்கம் விலை அதிகரித்துள்ளது. இன்றய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணதங்கத்தின் விலை ரூ.376 உயர்ந்து ரூ. 37,680 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.42 அதிகரித்துள்ளது. ரூ.4,71 விற்பனையாகி வருகிறது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ரூ.67.90 ஆக இருந்தது. இன்று அது ரூ.68 ஆக 10 பைசா அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி 68 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இன்று தங்கம் விலை எதிர்பார்த்த அளவு அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழந்துள்ளனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்க எண்ணியவர்களும் கவலை அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here