தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட கூட்டுறவு சங்க வாடிக்கையாளர்களுக்கு 5 சவரன் அளவிலான நகைக்கடன் தள்ளுபடி குறித்து முக்கிய அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சி சார்பில் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை பிரச்சார கூட்டத்தில் விமர்சித்து வருகின்றன. மேலும் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் திமுக சார்பில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஊர் ஊராகச் சென்று, தங்களுடைய கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டாலும் தமிழக மக்கள் அவர்களை நம்பி ஏமாற மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
TNPSC குரூப் 2, 2A தேர்வில் 5831 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, வயது வரம்பு & முழு விபரம் இதோ!
இதனை தொடர்ந்து அ.தி.மு.க கட்சி 2011-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது, தமிழ்நாட்டினுடைய கடன் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்தான் இருந்தது. கடந்த பத்தாண்டு காலத்தில் மட்டும், ஐந்தரை லட்சம் கோடி ரூபாயாக கடனை உயர்த்தியது அதிமுக கட்சி, இதனால் தமிழ்நாட்டை கடனாளி மாநிலம் என்ற பெயருக்கு உள்ளானது என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி நெருக்கடி நிலையிலும் திமுக அரசு பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் கூறினார். இதனை தொடர்ந்து நகைக்கடன் தள்ளுபடி குறித்து பேசிய முதல்வர், அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் அதிகமான நகைக்கடன் முறைகேடுகள் நடந்ததாகவும், அந்த முறைகேடுகளை களைத்து மக்களுக்கு நகைக்கடைகளை தள்ளுபடி செய்ததாகவும் கூறினார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் சிறப்பு விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கூட்டுறவு வங்கியில் 500 நகைப் பொட்டலங்களில், 261 பொட்டலங்களில் நகைகளே இல்லை அதை வைத்து மட்டும், ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஒருவர், 11 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய்க்கு கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்திருக்கிறார். எந்தத் திட்டமாக இருந்தாலும், அதற்கான பயனாளிகள் உண்மையாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் உண்மையான பயனாளிகளுக்கு நகைக்கடன் ரத்து செய்து விட்டதாகவும், அந்த வகையில் 13 லட்சம் குடும்பங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சிதான் திமுக ஆட்சி என்று தெரிவித்துள்ளார்.