சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு – இன்றைய நிலவரம்!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு – இன்றைய நிலவரம்!

கடந்த சில நாட்களாக சவரனுக்கு ரூ.200 வரை உயர்ந்திருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு சவரன் ரூ.128 வரை குறைந்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.35,752 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்க நகை விற்பனை

நாளுக்கு நாள் தங்கவிலையில் ஏற்படும் அதிரடி உயர்வால் அவசிய, அத்தியாவசிய காரியங்கள் நிமித்தமாக தங்கம் வாங்குபவர்களின் நிலை சற்றே கவலைக்கிடமாகி இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் சொல்லக்கூடிய அளவுக்கு தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இதனிடையே ஏதாவதொரு நாளில் மட்டும் தங்கத்தின் விலை சற்றே குறைந்து வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை அளிக்கிறது.

‘மதுரை டூ செங்கோட்டை’ முன்பதிவில்லா சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 25) காலை துவங்கியுள்ள தங்க மார்க்கெட் நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. அதாவது நேற்று (ஆகஸ்ட் 24) வரை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 என்ற அளவில் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய விலையில் சிறிதளவு இறக்கம் கண்டு ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.35,752 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அதே நேரத்தில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,469 என விற்பனையாகிறது. இந்த விலை நேற்று ரூ.4,485 ஆக விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சென்னையில் வெள்ளியின் சில்லறை வர்த்தகம் சற்றே உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.67.90 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!