இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா – 37,593 பேருக்கு தொற்று, 648 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 648 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இன்றைய கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 37,593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றை விட பாதிப்புகள் இன்று அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,25,12,366 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் ஓரளவு ஓய்ந்துள்ளது என்று மக்கள் ஆறுதல் அடையும் இந்த நேரத்தில் மீண்டும் உயருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு – இன்றைய நிலவரம்!
அதனை தொடர்ந்து நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 648 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,35,758 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 59,55,04,593 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இந்த நிலையில் தொடர் சிகிச்சையால் நேற்று ஒரே நாளில் 34,169 பேர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,17,54,281 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணமடைந்தோர் விகிதம் 97.67% என்ற நிலையில் உள்ளது. இந்தியாவில் 3,22,327 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.99% ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.