‘மதுரை டூ செங்கோட்டை’ முன்பதிவில்லா சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முன்பதிவு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது மதுரை- செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் முன்பதிவு இல்லாமல் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை தடுக்க முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளே ஒரே தீர்வாக இருந்தது. அதனால் மாநிலம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் எனவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் ரயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்பட்டன.
கேப்டன் விஜயகாந்திற்கு இன்று 69வது பிறந்த நாள் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ரயில்களில் முன்பதிவு செய்து இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முன்பதிவு இல்லாத ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ரயில்களில் கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைவதால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதனால் மதுரை – செங்கோட்டை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து மாலை 3.45 மணிக்கும் ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது மீண்டும் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்