கேப்டன் விஜயகாந்திற்கு இன்று 69வது பிறந்த நாள் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

0
கேப்டன் விஜயகாந்திற்கு இன்று 69வது பிறந்த நாள் - அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
கேப்டன் விஜயகாந்திற்கு இன்று 69வது பிறந்த நாள் - அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
கேப்டன் விஜயகாந்திற்கு இன்று 69வது பிறந்த நாள் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

தேமுதிக கட்சியின் தலைவரும், முன்னணி நடிகருமான கேப்டன் விஜயகாந்த் தனது 69-வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் இன்று கொண்டாடினார்.

கேப்டன் விஜயகாந்த்:

தமிழ் திரை உலகத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராகவும், தேமுதிக கட்சியின் தலைவராகவும் உள்ளவர் கேப்டன் விஜயகாந்த் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் 1952-ம் ஆண்டு, விருதுநகர் மாவட்டம், அருகில் உள்ள ராமானுஜபுரம் என்னும் சிறு கிராமத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் விஜயராஜ் என்பது குறிப்பிடத்தகுந்தது. திரை உலகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தையும் முத்திரையையும் பதித்தவர் கேப்டன் விஜயகாந்த்.

பண்டிகை காரணமாக இரவு ஊரடங்கில் தளர்வுகள் – குஜராத் அரசு உத்தரவு!

அரசியல் பிரவேசம்:

2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்(தேமுதிக ) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி மக்கள் பணியாற்றி வந்தார். இதன்பிறகு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு மாநில சட்டமன்ற தேர்தலில், விருத்தாசலம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக அடியெடுத்து வைத்தார். தமிழக சட்டமன்ற வரலாற்றில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின் போது பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக, சட்டமன்றத்தில் தமது கருத்துக்களை முழங்கியவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.

வீட்டிற்கு பொருள்கள் வாங்கும் கண்ணன் ஐஸ்வர்யா, ரோட்டில் இருவரையும் பார்த்து வருத்தப்படும் மூர்த்தி தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

இந்த நிலையில் தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடும் கேப்டனுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “விஜயகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்”. வழக்கமாக தனது பிறந்தநாளை கட்சியின் தொண்டர்கள், மக்களோடு சேர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என்று கேப்டன் கூறுவார். இதனால் இவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கொண்டாட இவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் கொரோனா அச்சத்தால் தன்னை நேரில் பார்க்க தொண்டர்கள் வர வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!