தமிழ்நாடு மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்பும் திட்டம் – அதிகாரிகள் தகவல்!
தமிழகத்தில் கடந்த 2020 ம் ஆண்டு முதல் மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், பணியாளர்களை நிரப்புவதற்கான தேர்வுகள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மின்வாரியம்:
தமிழகத்தில் மின்சார வாரியத்திற்கான பணியாளர்கள் மின்வாரியம் நடத்தும் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு மின்வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பெறப்பப்பட்டது. அதன்படி, 600 உதவி பொறியாளர், 500 இளநிலை உதவியாளர், 1,300 கணக்கீட்டாளர் பணியிடங்கள் காலியாக இருந்தது.
தமிழகத்தில் வணிக வரித்துறை தொடர்பான புகார்கள் – புதிய பிரிவு துவக்கம்!
தொடர்ந்து 2021ம் ஆண்டுக்கான 2,900 காலிப்பணியிடங்களுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. கொரோனா தொற்றின் காரணமாக இந்த பணிகளுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஆட்சி மாற்றம் நடந்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
இதனால் கடந்த இரண்டு வருடங்களாக நிரப்பப்படாமல் உள்ள 5,300 காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என்று விண்ணப்பதாரர்கள் எதிர்பார்த்தனர். முன்னதாக விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்நிலையில், பழைய தேர்வுகளை ரத்து செய்து விட்டு, புதிதாக தேர்வுகளை அறிவிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.