தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது – அரசுக்கு கண்டனம்!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது - அரசுக்கு கண்டனம்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது - அரசுக்கு கண்டனம்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது – அரசுக்கு கண்டனம்!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் பெற்ற 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களின் 35 லட்சம் பேரில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட மாட்டாது என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நகைக்கடன்:

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு திட்டமிடப்பட்டு சங்க ஊழியர்கள் நகை கடன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களில் நகை வழங்கியதிலும், பெற்றததிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்த ஆய்வு செய்ய அரசு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்சார வாரியத்தில் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில் 2021 மார்ச் 31ம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் பெற தகுதியானவர்கள் மற்றும் தகுதி அற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அடகு வைத்த நகைகளை திரும்ப கொடுப்பதற்கு பட்டியல் தயாரிக்கபட்டுவிட்டது. பொங்கலுக்கு முன்பு நகைகள் கிடைக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். . தற்போது தயாராகியுள்ள பட்டியலின் படி 13,47,33 பேர் நகைக்கடன் பெற தகுதியானவர்கள் பட்டியலில் உள்ளனர்.

BSNL நிறுவனத்தில் 55 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, சம்பளம் & விண்ணப்ப விவரங்கள்!

மீதமுள்ள 35 லட்சம் பேர் நகைக்கடன் பெற தகுதியற்றவர்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.லையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதியின் அடிப்படையில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்ற ஏழை மக்கள் அனைவருக்கும், எவ்வித நிபந்தனையும் இன்றி முழுவதுமாக நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here