தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம் – பொதுமக்கள் புகார் அளிக்க ஏற்பாடு!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் பொதுமக்கள் தங்களின் புகார்களை அளிப்பதற்கு தற்போது புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர்:
தமிழகத்தில் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் அவர்கள் மக்கள் பயனடையும் வகையில் பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது நிலவும் கொரோனா நோய் பரவல் காலத்தில் போர்க்கால அடிப்படையில் பல கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தற்போது தமிழகத்தில் கொரோனா சூழலை கையாள்வது சிறப்பாக உள்ளது என்று மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவாக்சின் ரூ.1410, கோவிஷீல்டு ரூ.789 – தனியார் மருத்துவமனைகளுக்கு விலை நிர்ணயம்!
கொரோனா கால கட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு நிவாரணமாக ரேஷன் கடைகள் மூலம் நிதி மற்றும் மளிகை பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர். தற்போது புதிய நடவடிக்கையாக பொதுமக்களுக்கு ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை முதல்வரிடம் தெரிவிக்கும் வகையில் முதல்வர் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
பொதுமக்கள் www.cmcell.tn.gov.in/register.php என்ற இணையதளத்தில் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் மக்கள் அளித்த புகார்களுக்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சார காலத்தில் அளித்த வாக்குறுதி படி ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற பெயரில் மக்களிடம் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
Only complaint then reply with reference number. Reply (under process).no use only drama