தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு!

0
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை - கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை - கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 2022 – 2023 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் மாணவர்கள் இணையத்தில் மதிப்பெண்களை பதிவிட செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

கால அவகாசம்:

தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பெண் முடிவுகள் வெளியானதை அடுத்து கல்லூரிகளில் 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. கடந்த ஜூன் 20ம் தேதி முதல் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப பதிவுகள் நடைபெற்றது. மொத்தமுள்ள 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 4 ,7,045 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது பொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இதில் 10,351 மாணவர்களுக்கு இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பொது பிரிவினர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 25ம் தேதி தொடங்க படவுள்ளதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மற்ற கல்லூரிகளை போல தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திலும் கியூட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை கடந்த செப்டம்பர் 20ம் தேதி முதல் நடைபெற தொடங்கியது.

IT துறையில் 96% ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இதனையடுத்து மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட உத்தரவிடப்பட்டது. மேலும் இதற்கு செப்டம்பர் 25ம் தேதி வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் தற்போது மதிப்பெண்களை பதிவிட செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்ட படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மத்திய அரசு நடத்தும் கியூட் எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!