TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – சிலபஸ், தேர்வு முறை பற்றிய முழு விவரம் இதோ!

0
TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - சிலபஸ், தேர்வு முறை பற்றிய முழு விவரம் இதோ!
TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - சிலபஸ், தேர்வு முறை பற்றிய முழு விவரம் இதோ!
TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – சிலபஸ், தேர்வு முறை பற்றிய முழு விவரம் இதோ!

TNPSC குரூப் 4 தேர்வுக்கான தேதி மற்றும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் கடந்த மாதம் 29ம் தேதி வெளியிட்டார். குரூப்-4 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில், சுமார் 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குரூப் 4 மற்றும் VAO தேர்வு பாடத்திட்டம் குறித்த முக்கிய தகவல்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

சிலபஸ், தேர்வு முறை:

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தேவைப்படும் தகுதியான பணியாளர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் பணியமர்த்தப்படுகின்றனர். TNPSC மூலமாக குரூப் 1, குரூப் 2, 2ஏ,குரூப் 3 ,குரூப் 4,உள்ளிட்ட பல தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஓராண்டில் எந்தெந்த அரசு பணிகளுக்கான தேர்வு அறிவிக்கை எப்போது வெளியிடப்படும், எப்போது தேர்வு நடக்கும், தேர்வு முடிவுகள், நேர்காணல் எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு தேர்வுக் கால அட்டவணை பெரிதும் உதவுகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அமலுக்கு வரும் சம்பள உயர்வு!

கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளதால் இந்த ஆண்டுக்கான போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகளை TNPSC வெளியிட்டுள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. 7,301 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். நேற்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை ஒரே நாளில் 3 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

1. குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

2.குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.

3. இந்த தேர்வில் முதல் பகுதியில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறும். இதில், தமிழ் மொழிப்பாடப்பிரிவில் இருந்து 100 வினாக்கள் இடம்பெறும். இதில் தற்போது 40 மதிப்பெண்கள் பெறுவது தகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

4. தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவுப் பகுதியை பொறுத்தவரை 100 வினாக்களில் 75- பொது அறிவு வினாக்களும், 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும்.

5.பொது அறிவு பகுதியில் அறிவியல்,நடப்பு நிகழ்வுகள் ,புவியியல் ,வரலாறு, இந்திய அரசியல் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!