TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு 2022 – பாடத்திட்டம் & தேர்வு முறை பற்றிய முழு விபரங்கள் இதோ!

0
TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு 2022 - பாடத்திட்டம் & தேர்வு முறை பற்றிய முழு விபரங்கள் இதோ!
TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு 2022 - பாடத்திட்டம் & தேர்வு முறை பற்றிய முழு விபரங்கள் இதோ!
TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு 2022 – பாடத்திட்டம் & தேர்வு முறை பற்றிய முழு விபரங்கள் இதோ!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பொழுது இத்தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை மற்றும் தகுதிகள் உள்ளிட்டவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அண்மையில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த மார்ச் 14ம் முதல் ஏப்ரல் 13ஆம் தேதி 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 2 தாள்களாக தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் 30 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

இதில் முதல் தாள் தேர்வு எழுத 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதுடன் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் 2ம் தாள் தேர்வு எழுத ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி அல்லது ஆசிரியர் பயிற்சியில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 18 வயது பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இதற்கு உச்ச வரம்பு ஏதும் கிடையாது. மேலும் முதல் தாள் மற்றும் 2ம் தாளில் 150 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படுகிறது. இந்த தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம் வழங்கப்படுகிறது.

தற்போது முதல் தாள் மற்றும் 2ம் தாளில் கேட்கப்படும் வினாக்களுக்கான பாடத்திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாடத்திட்டம்
  • குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 6 – 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல் உள்ளிட்ட பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது. இதில் 2ம் தாளில் 11 – 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது.
  • மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள் உள்ளிட்ட பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது
  • ஆங்கிலம்: மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள் உள்ளிட்ட பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது.
  • கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள்: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல் உள்ளிட்ட பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!