
Jio, Airtel, Vi நிறுவனம் வழங்கும் சூப்பரான பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான Jio, Airtel, Vi நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான திட்டங்களை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தினசரி அதிவேக டேட்டா மற்றும் 2 OTT சந்தாக்களை வழங்கும் திட்டங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
ப்ரீபெய்ட் திட்டங்கள்
இந்தியாவில் ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் அதிகளவு டேட்டாவை உபயோகப்படுத்தி வந்தனர். அத்துடன் தினமும் வழங்கப்படும் குறிப்பிட்ட அளவு டேட்டாவின் அளவையும் மீறி அதிக டேட்டாவை உபயோகப்படுத்தினர். தற்போது இவர்களுக்கு உதவி புரியும் வகையில் குறைந்த விலையில் தினசரி டேட்டாவுடன் 2 OTT சந்தாக்களை வழங்கும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதில் முதலாவதாக ஜியோ வழங்கும் திட்டத்தை பற்றி பார்ப்போம். ஜியோவின் ரூ. 601 திட்டம் மற்றும் ரூ. 499 திட்டம் 28 நாட்களுக்கு வரை வேலிடிட்டியுடன் வருகிறது. அத்துடன் இதில் தினசரி டேட்டாக்கள் முறையே 3ஜிபி மற்றும் 2ஜிபி கிடைக்கிறது. மேலும் இதில் 100 எஸ்எம்எஸ், அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்புகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலின் அணுகலுடன், ஜியோ சினிமா, ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோவின் பயன்பாடுகள் கிடைக்கிறது. அடுத்ததாக Vi வழங்கும் ரூ. 601 திட்டம் மற்றும் ரூ. 901 திட்டம் பற்றி முழுமையாக பார்ப்போம்.
TNPSC ரூ.2,05,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 626 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
இத்திட்டங்களில் 3GB தினசரி டேட்டாக்கள் கிடைக்கிறது. அத்துடன் இத்திட்டத்தின் வேலிடிட்டி நாட்கள் முறையே 28 நாட்கள் மற்றும் 70 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. அத்துடன் நாள் ஒன்றுக்கு 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்புகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்டவை கிடைக்கிறது. இதே போல் ஏர்டெல் வழங்கும் ரூ. 599 என்ற திட்டத்தில் 28 நாட்கள் வரை வேலிடிட்டிடன் கிடைக்கிறது. அத்துடன் இதில் தினசரி 3 ஜிபி டேட்டா மற்றும் 100 SMS, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் உள்ளிட்டவை கிடைக்கிறது. இதையடுத்து ரூ.838 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 56 நாட்கள் வரை செல்லுபடியாகும். அத்துடன் 100 SMS, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் உள்ளிட்டவை கிடைக்கிறது. மேலும் இந்த இரு திட்டங்களிலும் டிஸ்னி+ ஹாட் ஸ்டாருக்கு ஒரு வருட சந்தாவும் கிடைக்கிறது.