WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய மெனு, டெலீட் & அனிமேஷன் அம்சம் அறிமுகம்!

0
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - புதிய மெனு, டெலீட் & அனிமேஷன் அம்சம் அறிமுகம்!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - புதிய மெனு, டெலீட் & அனிமேஷன் அம்சம் அறிமுகம்!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய மெனு, டெலீட் & அனிமேஷன் அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்அப் செயலி தனது பீட்டா பயனர்களுக்கு மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கான்டெக்ஸ்ட் மெனு மற்றும் செய்திகளை நீக்குவதற்கான புதிய நேர வரம்பை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த அம்சங்கள் குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலி அதன் பீட்டா பயனர்களுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மெனு மற்றும் செய்திகளை அழிப்பதற்கான புதிய நேர வரம்பு உள்ளிட்ட பல அப்டேட்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் உலகின் முன்னணி மெசேஜிங் இயங்குதளமான வாட்ஸ்அப் அதன் விண்டோஸ் பீட்டா செயலியை மேம்படுத்த விரும்புவதால், இப்போது பீட்டா பயனர்கள் ஒரு பெரிய அப்டேட்டை பெற்றுள்ளனர். இது குறித்து WABetaInfo வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, ‘வாட்ஸ்அப் இப்போது மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் விண்டோஸ் பீட்டாவிற்கான மற்றொரு புதுப்பிப்பை அறிமுகப்படுத்துகிறது.

Exams Daily Mobile App Download

இது பீட்டா சோதனையாளர்களுக்கு மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மெனுவை வழங்குகிறது. இந்த புதிய அப்டேட் மூலம் வாய்ஸ் நோட்களை இடைநிறுத்தி, மீண்டும் தொடங்கும் திறனை பெற முடியும்’ என்று தெரிவித்துள்ளது. இப்போது வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் சேட் பக்கத்தில் ஒரு உரையைத் தேர்ந்தெடுக்கும் போது இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மெனு காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த புதிய கான்டெக்ஸ்ட் மெனுவைப் பயன்படுத்தும் போது எழுத்துப்பிழைகளை சரி செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்? அதிர்ச்சி தகவல்!

ஏனெனில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கான்டெக்ஸ்ட் மெனுவில் பரிந்துரைகள் காட்டப்படாது. இதற்கிடையில், WABetaInfo வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், WhatsApp இறுதியாக சில பீட்டா சோதனையாளர்களுக்கு செய்திகளை நீக்குவதற்கான புதிய கால வரம்பை வெளியிட்டுள்ளது. இதற்கான முந்தைய வரம்பு 1 மணிநேரம் 8 நிமிடங்கள் 16 வினாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது புதிய அப்டேட் மூலம் செய்திகளை நீக்குவதற்கான புதிய வரம்பு 2 நாட்கள் மற்றும் 12 மணிநேரமாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த அப்டேட்டின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாததால், அதை பயன்படுத்துவதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். இது தவிர வாட்ஸ்அப் செயலி, உங்கள் உரையாடல்களை வேடிக்கையாக மாற்றுவதற்கு எமோஜிகள், ஸ்டிக்கர்கள், ஜிஐஎஃப்கள் உள்ளிட்ட சில அனிமேஷன் அம்சங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியை போலவே வாட்ஸ்அப்பிலும் இனி அனிமேஷன் ஸ்டிக்கர்களை அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!