மாநிலம் முழுவதும் மீண்டும் அமலாகும் ஞாயிறு முழு ஊரடங்கு – அரசு உத்தரவு!

0
மாநிலம் முழுவதும் மீண்டும் அமலாகும் ஞாயிறு முழு ஊரடங்கு - அரசு உத்தரவு!
மாநிலம் முழுவதும் மீண்டும் அமலாகும் ஞாயிறு முழு ஊரடங்கு - அரசு உத்தரவு!
மாநிலம் முழுவதும் மீண்டும் அமலாகும் ஞாயிறு முழு ஊரடங்கு – அரசு உத்தரவு!

கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு முன்னதாக அமலில் வைத்திருந்த ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு உத்தரவை வரும் ஞாயிற்று கிழமை மீண்டும் அமல்படுத்த உள்ளது.

பொது ஊரடங்கு:

கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எர்ணாகுளம், திருச்சூர் போன்ற பிற மாவட்டங்களில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் மற்ற மாவட்டங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு வர பெற்றோர்கள் ஒப்புதல் அவசியமா? மத்திய அரசு விளக்கம்!

கடந்த இரண்டு வாரங்களில் அதிகபட்சமாக பாதிப்பு பதிவு செய்த திருவனந்தபுரம், வயநாடு மற்றும் காசர்கோடு போன்ற சில மாவட்டங்களில், தற்போது நோய் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இதனால் கடந்த திங்கள்கிழமை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கோவிட் ஆய்வுக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. வரும் வாரத்தில் மாநிலத்தில் கொரோனா நோய் பாதிப்புகள் அதிக அளவில் உறுதி செய்யப்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் வரும் பிப்ரவரி 6ம் தேதி அன்று ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில சுகாதாரத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டார். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோவிட் இழப்பீடு கோரி பெறப்பட்ட 45,000 விண்ணப்பங்களில் 40,410 பேர் இழப்பீடு பெற்றுள்ளதையும் கூட்டத்தில் முதல்வர் அறிவித்தார்.

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு மீ்ண்டும் விடுமுறை – காரணம் இதுதான்! விரைவில் அறிவிப்பு!

மருத்துவமனைகள் மற்றும் ICU களில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட அவசர கால அறை அமைக்கப்பட வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார். மாநில உள்ளாட்சி அமைப்புகளில் தன்னார்வலர்களாக சுமார் 11 லட்சம் பேர் கோவிட் சிகிச்சையில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இரண்டாவது டோஸ் 84% மக்களுக்கும் , 15 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 71% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!