சன் டிவி சீரியல்களின் TRP ரேட்டிங் – சுந்தரியை பின்னுக்கு தள்ளிய ரோஜா!
ஒவ்வொரு வாரமும் வெளியிடப்பட்டு வரும் சீரியல்களின் ரேட்டிங் வரிசையில் ரோஜா தான் வழக்கம் போல் இந்த வாரமும் முதல் இடத்தில உள்ளது.
ரேட்டிங் வரிசை:
சின்னத்திரையின் அனைத்து சேனல்களிலும் பல்வேறு கதையம்சங்களை கொண்ட தொடர்கள் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகிறது. இந்த தொடர்களின் டிஆர்பி அனைத்து சேனல்களுடன் ஒப்பிடப்பட்டும் மற்றும் ஒவ்வொரு சேனலுக்கு என்று தனித்தனியாக வெளியிடப்படும். அந்த வாரம் முழுவதும் சீரியலின் விறுவிறுப்பை பொறுத்து ரேட்டிங் வரிசையில் இடம்பெறும். அந்த வகையில், 39வது வாரம் சன்டிவியில் சீரியல்களின் ரேட்டிங் வரிசை வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களில் இவருக்கு தான் முதல் ஆர்மி – ரசிகர்கள் அதிரடி!
அதன்படி, சன்டிவின் டாப் ஹிட்டான ரோஜா தான் இந்த வாரமும் 10.73 புள்ளிகள் ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து சுந்தரி 10.35 புள்ளிகள், வானத்தை போல 10.30 புள்ளிகள், கண்ணான கண்ணே மற்றும் பூவே உனக்காக இரண்டும் 9.14 புள்ளிகள், அபியும் நானும் 6.17 புள்ளிகள் பெற்று வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
வெண்பாவுக்கு பதிலடி கொடுத்த கண்ணம்மா – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!
அதற்கடுத்த வரிசையில், அன்பே வா 7.85 புள்ளிகள், பாண்டவர் இல்லம் 5.31 புள்ளிகள், 2000 எபிசோட்களை கடந்த 5.08 புள்ளிகள், சித்தி 2 4.93 புள்ளிகள் மற்றும் மறு ஒளிபரப்பான மெட்டி ஒலி 4.38 புள்ளிகள், தாலாட்டு 4.33 புள்ளிகள், திருமகள் சீரியல் 3.62 புள்ளிகள் பெற்றுள்ளது. இறுதியாக டாப் 15 பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை மகராசி 3.05 புள்ளிகள் மற்றும் மறுஒளிபரப்பான நந்தினி 2.30 புள்ளிகள் பெற்று உள்ளது. வரும் வாரங்களில் கதை மாற்றத்தை பொருத்து ரேட்டிங் பட்டியலில் மாற்றங்கள் நிகழவும் வாய்ப்புள்ளது.