ஒரே வாரத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த சன் டிவி ‘கயல்’ சீரியல் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
ஒரே வாரத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த சன் டிவி 'கயல்' சீரியல் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஒரே வாரத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த சன் டிவி 'கயல்' சீரியல் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஒரே வாரத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த சன் டிவி ‘கயல்’ சீரியல் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

சன் டிவியில் கடந்த ஒரு வாரமாக ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியல் அதிகபட்ச பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து 10.66 புள்ளிகளுடன் TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த வெற்றிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கயல் சீரியல்

சமீப காலமாக டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்கள் முடிவை எட்டி இருக்கிறது. அந்த வகையில் சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவி, சன் டிவியில் முக்கியமான சீரியல்கள் சில முடிவுக்கு வந்துள்ளது. அதற்கு பதிலாக புதிய சீரியல்கள் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதற்கிடையில் புதிய சீரியல்களின் அணி வகுப்பால் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்கள் பல தங்களது TRP ரேட்டிங்கை தக்கவைத்து கொள்ள போராடி வருகிறது.

புதிய கண்ணம்மாவாக மாறும் ‘யாரடி நீ மோஹினி’ வெண்ணிலா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் புது வரவு!

ஏனென்றால் இதுவரை பார்த்து பார்த்து போரடித்து போன பழைய கதைகளை விட புதிய கதைக்களத்துடன் வெளியாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்புகளை கொடுத்து வருகின்றனர். இதனால் புதிய சீரியல்களின் TRP ரேட்டிங் கணிசமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் சன் டிவியில் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியல் அதிகபட்ச பார்வையாளர்களின் கவனம் ஈர்த்திருக்கிறது. இந்த சீரியலில் நடிகர் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே விஜய் டிவியின் ‘ராஜா ராணி’ என்ற சூப்பர் ஹிட் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சஞ்சீவ் இத்தொடரில் எழில் என்கிற முக்கிய கதாப்பாத்திரத்திலும், ஜீ தமிழின் ‘யாரடி நீ மோஹினி’ சீரியலில் மிரட்டலான வில்லியாக நடித்திருந்த நடிகை சைத்ரா ரெட்டி கயல் என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இப்போது சன் டிவியில் ‘கயல்’ சீரியல் தினசரி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

‘பாக்கியலட்சுமி’ சீரியலை மீண்டும் பின்னுக்கு தள்ளிய ‘பாரதி கண்ணம்மா’ – TRP ரேட்டிங்!

இந்த சீரியல் வெளியாகி கிட்டத்தட்ட 13 எபிசோடுகள் மட்டுமே கடந்திருக்கும் நிலையில் ஒரே வாரத்தில் அதிகபட்ச பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து TRP ரேட்டிங்கில் 10.66 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தகவல் ‘கயல்’ சீரியல் குழுவினருக்கு எக்கச்சக்க மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. என்றாலும் வரும் வார எபிசோடுகளில் ‘கயல்’ சீரியல் மக்களின் ஆதரவை தக்கவைத்து கொள்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!