சன் டிவியில் நடிகை ஆலியா உடன் ஜோடி சேர இருக்கும் விஜய் டிவி சீரியல் ஹீரோ –  வெளியான ஷாக் அப்டேட்!

0
சன் டிவியில் நடிகை ஆலியா உடன் ஜோடி சேர இருக்கும் விஜய் டிவி சீரியல் ஹீரோ -  வெளியான ஷாக் அப்டேட்!
சன் டிவியில் நடிகை ஆலியா உடன் ஜோடி சேர இருக்கும் விஜய் டிவி சீரியல் ஹீரோ -  வெளியான ஷாக் அப்டேட்!
சன் டிவியில் நடிகை ஆலியா உடன் ஜோடி சேர இருக்கும் விஜய் டிவி சீரியல் ஹீரோ –  வெளியான ஷாக் அப்டேட்!

சின்னத்திரையில் அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் நடிகை ஆலியா மானசாவின் புது சீரியலில் ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் அவர் பிரபல சீரியலில் நடித்தவர் என்பதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

புது சீரியல்:

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஆலியா மானசா. அவர் இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த நிலையில் நடிப்பை விட்டு சிறிது மாதம் இடைவெளி எடுத்து இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் தனது ரசிகர்களுக்கு அறிவித்தார். மேலும் அது விஜய் டிவி இல்லை எனவும், முன்னணி சேனல் ஒன்றில் தான் என்ட்ரி கொடுக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Follow our Twitter Page for More Latest News Updates

அந்த வகையில் அவர் சன் டிவியில் புது சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக அவரே பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அந்த புது சீரியலில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக ரசிகர்களுக்கு குளு கொடுத்து இருந்தார். அவர் யார் என்பது குறித்து சஸ்பென்ஸ் நிலவி வந்த நிலையில், தற்போது அவர் யார் என உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. அவரும் விஜய் டிவி சீரியல் ஹீரோ என்பது ரசிகர்களை கூடுதல் அதிர்ச்சி அடைய  செய்துள்ளது.

இனியாவை எதிர்பார்த்து இருக்கும் குடும்பம்.. புது ட்ரெஸ் வாங்கி கொடுத்து கவனிக்கும் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

Exams Daily Mobile App Download

மேலும் அவர் வேறு யாரும் இல்லை விஜய் டிவியில் ராஜ பார்வை சீரியல் ஹீரோ முன்னா என்கிற முனாஃப் ரஹ்மான் தான். இவர் இதற்கு முன்னதாக சன் டிவியில் சந்திரலேகா சீரியலில் சஞ்சய் பரந்தாமனாக நடித்து வந்தார். அதன் பின் தான் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், அவர் மீண்டும் சன் டிவியில் புது சீரியலில் நடிகை ஆலியா உடன் ஜோடி சேர்ந்து இருப்பதால், ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!