மே 25 முதல் ஜூன் 19 வரை கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

0
மே 25 முதல் ஜூன் 19 வரை கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
மே 25 முதல் ஜூன் 19 வரை கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
மே 25 முதல் ஜூன் 19 வரை கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2021-22ம் கல்வியாண்டில் கல்லூரி மாணவர்களுக்கான கோடை விடுமுறை மே 25 முதல் அமலுக்கு வரும் என்று கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இந்த விடுமுறை முடிந்து ஜூன் 20 முதல் புதிய கல்வியாண்டு துவங்க இருக்கிறது.

கோடை விடுமுறை

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜூனியர் கல்லூரிகள் மற்றும் கூட்டு பட்டயக் கல்லூரிகளுக்கான கோடை விடுமுறைகள் குறித்த அறிவிப்புகளை மாநில அரசு தற்சமயம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2021-22ம் கல்வியாண்டிற்கான கோடை விடுமுறைகள் மே மாதம் 25ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று இடைநிலைக் கல்வி ஆணையர் எம்.வி.சேஷகிரி பாபு அறிவித்துள்ளார். இந்த விடுமுறைகள் ஜூன் 19 வரை நீடிக்கும். தொடர்ந்து, கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 20 முதல் 2022-23 கல்வியாண்டுக்கான கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும்.

Exams Daily Mobile App Download

மேலும் 2021-22ம் ஆண்டு கல்வி நாட்காட்டியின்படி, மே 25 முதல் ஜூன் 19 வரை கோடையுள்ள விடுமுறையில் ஜூனியர் கல்லூரிகள் மூடப்பட வேண்டும் என்று மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவன முதல்வர்கள் மற்றும் தனியார் உதவிபெறாத ஜூனியர் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புதிய கல்வியாண்டில் மாநில இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ள சேர்க்கை அட்டவணையின்படி மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். மாணவர்களை வற்புறுத்தி அல்லது ஈர்க்கும் வகையில் எந்த ஒரு கல்லூரியும் தேவையற்ற பிரச்சாரங்களில் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 15 முதல் 20 நிமிடங்கள் வரை யோகா இடைவேளை!

இப்போது கல்லூரிகளுக்கு இடையே ஆரோக்கியமற்ற போட்டியை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள், சுவர் எழுத்துக்கள், மின்னணு ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் விளம்பரங்கள் செய்யக்கூடாது என்றும் விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாநில கல்வித்துறை தெளிவுபடுத்தி இருக்கிறது. இதனிடையே முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் அந்தந்த கல்லூரி முதல்வர்களின் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் மாணவர்கள் கல்லூரி முதல்வர்களை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here