அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 15 முதல் 20 நிமிடங்கள் வரை யோகா இடைவேளை!

0
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 15 முதல் 20 நிமிடங்கள் வரை யோகா இடைவேளை!
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 15 முதல் 20 நிமிடங்கள் வரை யோகா இடைவேளை!
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 15 முதல் 20 நிமிடங்கள் வரை யோகா இடைவேளை!

ஹரியானா மாநிலத்தில், அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை எல்லோரும் தினமும் சிறிது நேரம் யோகா செய்ய வேண்டும் என அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அந்த மாநிலத்தில் பல ஊழியர்கள் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இதனால் அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாகவும் கருத்துகள் வந்துள்ளன.

யோகா இடைவேளை:

இந்தியாவில், ஒமைக்ரான் பரவல் மற்றும் கொரோனா காரணமாக, கொரோனா பாதிப்பு தீவிரமாகப் பரவியது. இதன் காரணமாக அரசு அலுவலகங்களில், 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது. இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில், கடந்த பிப்ரவரி 9 முதல் அரசு அலுவலகங்களுக்கு 100 சதவீத ஊழியர்கள் வருகைத் தர வேண்டும் என்றும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து முக்கிய அறிவிப்பை தற்போது ஹரியானா அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஹரியானா அரசு தனது அனைத்து துறைகள், வாரியங்கள் மற்றும் பிற அலுவலகங்கங்களில் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் யோகா இடைவேளை கொடுத்து யோகாவை ஊக்குவிக்க அறிவுறுத்தியுள்ளது.

TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – TET பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?

மேலும் நிர்வாகச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், கோட்ட ஆணையர்கள், துணை ஆணையர்கள், நிர்வாக இயக்குநர்கள், வாரியங்கள், கார்ப்பரேஷன்கள், பல்கலைக்கழகங்களின் பதிவுகளின் தலைமை நிர்வாகிகள் ஆகியோருக்கு ஹரியானா மாநிலத்தின் கூடுதல் சுகாதாரச் செயலாளர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரசாங்க அலுவலகங்களின் வேலை நேரத்தில் யோகா குறித்து (ஒய்-பிரேக்) எல்லோரோரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒய்-பிரேக் புரோட்டோகால் என்பது மன அழுத்தத்தை குறைக்க வடிவமைக்கப்பட்ட மிகக் குறைவான பயனுள்ள யோகா பயிற்சிகளைக் கொண்ட ஒரு யோகா நெறிமுறையாகும். யோகா (ஒய்-பிரேக்) கருத்து உலகெங்கிலும் உள்ள தொழில் வல்லுநர்களுக்குப் பொருத்தமானது. இது சிறந்த நிபுணர்களால் கவனமாக உருவாக்கப்பட்டது நன்கு சோதிக்கப்பட்ட. நெறிமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த ஒய் பிரேக் முறை கடந்த ஜனவரி 2020 ஆம் ஆண்டு ஆறு மெட்ரோ நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. மொரார்ஜி தேசாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் யோகா மையம் மற்றும் ஆறு நிறுவனங்களுடன் இணைந்து பதினைந்து நாள் யோகா வகுப்புகள் நடத்தப்பட்டது. பல்வேறு தனியார் மற்றும் அரசு அமைப்புகளில் இருந்து மொத்தம் 717 பங்கேற்பாளர்கள் பங்கேற்றார்கள். ஒய்-பிரேக் செப்டம்பர் 1, 2021 அன்று புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் ஐந்து மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் முறைப்படி தொடங்கப்பட்டது என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 20 நிமிடங்களில் முடிக்கக்கூடிய இந்த இடைவேளையில் அந்த யோகா பயிற்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு சில பயிற்சிகள் நாற்காலியில் உட்கார்ந்து செய்யக்கூடியவை மற்றும் சில நிற்கும் நிலையில் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!