கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பா? கல்வித்துறை அதிகாரி பதில்!

0
கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பா? கல்வித்துறை அதிகாரி பதில்!
கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பா? கல்வித்துறை அதிகாரி பதில்!
கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பா? கல்வித்துறை அதிகாரி பதில்!

கர்நாடகத்தில் வரும் 16-ந் தேதி புதிய கல்வி ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தொடங்க உள்ளது, மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து உள்ளது. இந்த கோரிக்கை குறித்து கல்வித்துறை அதிகாரி பதிலளித்துள்ளார்.

கல்வித்துறை அதிகாரி பதில்:

கடந்த சில வாரங்களாக வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத அளவுக்கு கடும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், பொதுமக்கள் பகலில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது .ஒரு சில மாநிலங்களில் கோடை மழை பெய்து வந்தாலும், வெயிலின் தாக்கம் குறையாமல் தான் இருக்கிறது. நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் சரியாக திறக்கப்படாமல் ஆன்லைன் முறையில் வகுப்புகள், நடைபெற்றது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகம் பாதிப்படைந்தது.

UPSC சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான கால அட்டவணை – தேர்வு வாரியம் வெளியீடு!

இதனால் கர்நாடக மாநிலத்தில், 2022-23-ம் ஆண்டு பள்ளிகளை முன்கூட்டியே திறக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி, வருகிற 16-ந் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே 29-ந் தேதி தான் பள்ளிகள் தொடங்கப்படும். ஆனால் கொரோனா காரணமாக முன்கூட்டியே வருகிற 16-ந் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று மந்திரி பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாணவ, மாணவிகள் நலன் கருதி பள்ளிகளை திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும், விடுமுறை நாட்களை அதிகரிக்க வேண்டும் என முதல்-மந்திரி பசவாஜ் பொம்மைக்கு, மேல்-சபை உறுப்பினர் (எம்.எல்.சி) போஜேகவுடா கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.

Exams Daily Mobile App Download

மற்ற மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் பள்ளிகளை திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படுமா? என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கல்வித்துறை கமிஷனர் விசால் நிருபர்களிடம் கூறியது, இந்த சூழ்நிலையில் பள்ளிகளை திறக்கும் தேதியில் மாற்றம் செய்வது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. மேலும் மாநிலத்தில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தால், பள்ளிகளை திறக்கும் தேதியை தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here