UPSC சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான கால அட்டவணை – தேர்வு வாரியம் வெளியீடு!

0
UPSC சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான கால அட்டவணை - தேர்வு வாரியம் வெளியீடு!
UPSC சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான கால அட்டவணை - தேர்வு வாரியம் வெளியீடு!
UPSC சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான கால அட்டவணை – தேர்வு வாரியம் வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுக்கான கால அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தேர்வு கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வு குறித்த அறிவிப்புகளை பற்றி பார்ப்போம்.

கால அட்டவணை

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் அரசு போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து அரசு போட்டிக்குரிய அறிவிப்புகள் ஒன்றன் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2023ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி UPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு இந்த கால அட்டவணை தேர்வுக்கு தயாராக புதிய உத்வேகத்தை தருகிறது.

சென்னை மாநகராட்சியில் 60 காலிப்பணியிடங்கள் – மாதம் 90,000 வரை ஊதியம்!

இந்த தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ளதாவது, சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி அன்று வெளியிடப்படும். அத்துடன் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 21ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 15ம் தேதி அன்று முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அத்துடன் இந்திய வனப் பணிக்கான முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி அன்று நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பல்வேறு வகையான தேர்வு குறித்த அறிவிப்பு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் UPSC சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் upsc.gov.in என்ற UPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று 2023ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை பார்க்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கொண்டிருப்பவர்கள் upsc.gov.in என்ற UPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று 2023ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை பார்க்கலாம்.  மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://www.upsc.gov.in/sites/default/files/AnnuCalend_2023_Eng_04052022.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!