‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடிகர் திடீர் மாற்றம் – முக்கிய திரை பிரபலம் என்ட்ரி!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் நடிகர் திடீர் மாற்றம் - முக்கிய திரை பிரபலம் என்ட்ரி!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் நடிகர் திடீர் மாற்றம் - முக்கிய திரை பிரபலம் என்ட்ரி!'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் நடிகர் திடீர் மாற்றம் - முக்கிய திரை பிரபலம் என்ட்ரி!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடிகர் திடீர் மாற்றம் – முக்கிய திரை பிரபலம் என்ட்ரி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரிட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அப்படி, பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று. இந்நிலையில் தொடரில் திடீரென நடிகர் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.

நடிகர் திடீர் மாற்றம்:

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், அண்ணன்-தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதாவது எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அண்ணன் தம்பிகள் பிரியாமல் இருந்தனர். இருப்பினும் தனம் பிறந்தநாள் அன்று ஏற்பட்ட பெரும் பிரச்சனையால் கதிர்- முல்லை வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர்.

Exams Daily Mobile App Download

இதனால் மூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, வீட்டில் ஓய்வில் உள்ளார். இதனால் பாண்டியன் ஸ்டோர் மளிகை கடையை ஜீவா மட்டும் தனியாக பார்த்து வருவதால் கடையை சமாளிக்க முடியவில்லை. இதனால் என்ன செய்வது என்று யோசித்து தனமும் சில தினங்களாக கடைக்கு சென்று கடையை கவனித்து வருகிறார். தனம் வீட்டில் இல்லாததால் மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சமைக்க போட்டி போட்டுக் கொள்கின்றனர். மற்றொரு பக்கம் கதிர் தனி குடித்தனம் சென்று உள்ளார். மேலும் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

ஷூட்டில் அட்டகாசம் செய்யும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா – வைரலாகும் வீடியோ!

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் புதிதாக ஒரு நபர் நடிக்க வந்துள்ளார். இந்த பாண்டியன் ஸ்டோர் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த குமரேசன் மாமா என்ற கதாபாத்திரத்தில் நெல்லை சிவா நடித்து வந்தார். அவர் நிஜத்தில் உயிரிழந்ததன் காரணமாக இந்த சீரியலில் குமரேசன் மாமா கதாப்பாத்திரம் காட்டப்படாமல் இருந்தது. மேலும் அவருக்கு பதில் வேறு கதாபாத்திரமும் மாற்றாமல் இருந்து வந்த நிலையில் தற்போது குமரேசன் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகர் நடிக்க வந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் முருகன் தான்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!