தமிழக அரசு ஊழியர்களின் வீட்டை இடிக்க உத்தரவு? திடீர் அறிவிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களின் வீட்டை இடிக்க உத்தரவு? திடீர் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களின் வீட்டை இடிக்க உத்தரவு? திடீர் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களின் வீட்டை இடிக்க உத்தரவு? திடீர் அறிவிப்பு!

மதுரையில் அரசு ஊழியர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் அந்த குடியிருப்பு வீடுகளை இடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு மாதத்திற்குள் ஊழியர்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டை இடிக்க உத்தரவு:

தமிழக அரசு ஊழியர்களுக்கு அரசின் சார்பிலேயே குடியிருப்புகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை புளியந்தோப்பு பகுதிகளில் வசித்து வந்த அரசு ஊழியர்களின் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தரமற்றதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டன. மேலும், அந்த வீடுகளில் சிமெண்ட் பூச்சுகள் அனைத்தும் உதிர்வதாக குற்றசாட்டு வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, அரசு ஊழியர்களின் குற்றசாட்டுகளை ஏற்று தமிழகம் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

மேலும், கிட்டதட்ட 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.1,200 கோடி செலவில் மறு கட்டுமானம் செய்யப்பட்டது. அதே போல மதுரையில் உள்ள சொக்கிகுளம், ரேஸ்கோர்ஸ் காலனி, டிஆர்ஓ காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் கிட்டதட்ட 20 மற்றும் 40 ஆண்டுகளுக்கும் பழமையானது. இந்த வீடுகளிலும் சிமெண்ட் பூச்சுகள் சிதறல் அடைந்து வருவதாலும் அந்த குடியிருப்புகளில் வசிப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் குடியிருப்புகளை இடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூலை இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியீடு?

அதாவது, மதுரை சொக்கிகுளம் காலனியில் உள்ள 132 அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகளில் உள்ள வீடுகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் அந்த குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஒரு மாதத்திற்குள் காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த திடீர் உத்தரவால் ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது, இந்த ஆனி, ஆடி மாதங்களில் பொதுவாக எந்த வீடும் காலியாவதில்லை. அது மட்டுமல்லாமல் எங்களது குழந்தைகளையும் அருகில் உள்ள பள்ளியில் தான் சேர்த்துள்ளோம். இதனால், ஒரு மாத காலத்திற்குள் வீட்டை காலி செய்வது என்பது முடியாத காரியமாகும். இந்த வீட்டிற்கு பதிலாக வேறொரு வீட்டை ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!