CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூலை இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியீடு?

0
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஜூலை இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியீடு?
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஜூலை இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியீடு?
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூலை இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியீடு?

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்ட மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இந்த மாதம் இறுதியில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தேர்வு முடிவுகள்:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிக்கைகளின்படி, ஜூலை மாதம் கடைசி வாரத்தில் CBSE வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்வு முடிவுகள் வெளியானதும் cbseresults.nic.in, results.gov.in என்ற இணையதளங்கள் மூலம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதே போல புதிதாக தொடங்கப்பட்ட போர்டல் பரிக்ஷா சங்கத்திலிருந்தும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த 2021-22ம் கல்வியாண்டுக்கான CBSE தேர்வுகள் இரண்டு டெர்ம் அடிப்படையில் நடத்தப்பட்டது. அதாவது, இந்தியாவில் நிலவி வந்த கொரோனா பரவலை கவனத்தில் கொண்டு CBSE மாணவர்களுக்கான தேர்வுகள் இரண்டு டெர்ம் ஆக நடைபெற்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற முதல் டெர்ம் தேர்வுகளுக்கான முடிவுகள் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியானது.

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுப்பு – பருவமழை எதிரொலி!

தொடர்ந்து 2022 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்ட டெர்ம் 2க்கான முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை 4 ஆம் தேதிக்குள் வெளியிடும் என்று பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. ஆனால், சில தாமதங்கள் காரணமாக தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியாகவில்லை. இந்த நிலையில் சமீபத்திய ஊடக அறிக்கைகள் படி பார்த்தால், தேர்வு மதிப்பீட்டு செயல்முறை நடந்து வருவதாகவும், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் வாரிய அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!