மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறப்பு, 144 தடை உத்தரவு அமல் – அரசு அனுமதி!

0
மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறப்பு, 144 தடை உத்தரவு அமல் - அரசு அனுமதி!
மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறப்பு, 144 தடை உத்தரவு அமல் - அரசு அனுமதி!
மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறப்பு, 144 தடை உத்தரவு அமல் – அரசு அனுமதி!

கர்நாடகாவில் முதன் முதலாக ஹிஜாப் விவகாரத்தை ஆரம்பித்த உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் இன்று (பிப்.17) முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. என்றாலும் மற்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

மாநிலம் முழுவதும் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் ஹிஜாப் தடை சர்ச்சைக்கு மத்தியில், உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளி மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் சுமார் 8 நாட்கள் கழித்து இன்று (பிப்.17) முதல் நேரடி வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர். இருப்பினும், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 200 மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனில் உள்ள இந்தியர்களை அழைத்துவர விமானங்கள் இயக்க அனுமதி – ஒன்றிய அரசு அறிவிப்பு!

அதாவது, கர்நாகவில் கடந்த வாரத்தில் தீவிரமடைந்து வந்த ஹிஜாப் தொடர்பான சர்ச்சை காரணமாக பிப்ரவரி 9ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிலைமை சற்று மேம்பட்டு வரவும் பள்ளிகளை மீண்டும் திறந்துள்ள மாநில அரசு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் CrPC பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது பிப்ரவரி 28 ஆம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தென்றல் வந்து என்னை தொடும்” சீரியலில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு காட்சிகள் – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

இப்போது கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு மத்தியில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘அனைத்து பள்ளிகளும் சரியாக இயங்குவது மற்றும் அனைத்து மாணவர்களும் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் 2 அல்லது 3 மாணவிகள் மட்டுமே ஹிஜாப் அணிந்தது வந்ததால் பள்ளியில் இருந்து திரும்பி சென்றனர்’ என்று அம்மாநிலத்தின் தொடக்க மற்றும் இடைநிலைக்கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜேஎம் காசி ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து தொடரப்பட்ட பல மனுக்களை விசாரித்து வருகிறது. இது குறித்த முடிவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!