IPL போட்டிகளுக்கு இடையே 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ.18 லட்சம் – ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு!

0
IPL போட்டிகளுக்கு இடையே 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ.18 லட்சம் - ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு!
IPL போட்டிகளுக்கு இடையே 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ.18 லட்சம் - ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு!

IPL போட்டிகளுக்கு இடையே 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ.18 லட்சம் – ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு!

ஐபிஎல் போட்டிகளின் இடையே ஒளிபரப்பாகும் விளம்பரத்திற்கான தொகையை ஸ்டார் நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள்:

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் போட்டிகள் ஆகும். இதனை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஐபிஎல் போட்டிகளை நேரில் மட்டுமல்லாது டிவி, ஹாட்ஸ்டார் போன்று ஒளிபரப்பப்படும் தளங்களின் வாயிலாகவும் அநேகமானோர் கண்டு களித்து வருகின்றனர். முன்னர் இதனை ஒளிபரப்பும் உரிமை சோனி குழுமத்திடம் இருந்தது. அதனை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கி விட்டது.

Tokyo Paralympics 2020 – துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற அவனி லெகாரா, 2வது பதக்கம்!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவியதால் கடந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மூலமாக லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர். அதேபோல் இந்த ஆண்டும் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது. போட்டியின் போது ஒவ்வொரு ஓவர்களுக்கும் இடையே 10 வினாடிகளுக்கு ஒரு விளம்பரம் ஒளிபரப்பப்படும். ரசிகர்கள் ஆவலுடன் போட்டியை காணும்போது வரும் விளம்பரம் என்பதனால் ரசிகர்கள் அதனையும் கவனிப்பர். இதனால் ஸ்பான்ஸர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்படும்.

Tokyo Paralympics High Jump – வெள்ளி வென்றார் இந்திய வீரர் பிரவீன் குமார்!

தற்போது இதற்கான தொகையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது. போட்டியின் போது 10 வினாடி இடத்திற்கு ரூ.14.1 முதல் 14.3 லட்சம் வரை முன்னர் வசூலிக்கப்பட்டது. ஸ்பான்சர்ஷிப்பின் வழங்கும் நிறுவனம் ரூ.110-125 கோடி வரையில், இணை ஸ்பான்சர்ஷிப் விலை ரூ. 65-70 கோடி எனவும் இருந்த விலை தற்போது 10 வினாடி இடத்திற்கு ரூ.18 லட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சீசனை 7 பில்லியன் மக்கள் கண்டு களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!