SSC SI Paper II தேர்வு முடிவு வெளியீடு – முழு விவரம் இதோ!

0
SSC SI Paper II தேர்வு முடிவு வெளியீடு - முழு விவரம் இதோ!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான SSC SI Paper II எழுத்து தேர்வின் முடிவையும், கட் ஆப் மதிப்பெண் பட்டியலையும் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

SSC SI தேர்வு முடிவு:

டெல்லி காவல்துறை மற்றும் CAPFs-ல் காலியாக உள்ள Sub-Inspector பணிக்கென 2023 – 2024ம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பை SSC தேர்வாணையம் ஆனது வெளியிட்டது. இப்பணிக்கான SSC SI Paper I எழுத்து தேர்வானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 03ம் தேதி முதல் 05ம் தேதி வரை நடத்தப்பட்டு 25.10.2023 அன்று தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டது. பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு PET / PST தேர்வானது 14.11.2023 அன்று நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் 20.12.2023 அன்று வெளியிடப்பட்டது.

SSC SI PET / PST தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு SSC SI Paper II எழுத்து தேர்வானது 08.01.2024 அன்று திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. சுமார் 8544 நபர்கள் கலந்து கொண்ட இத்தேர்வின் முடிவுகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் கட் ஆப் மதிப்பெண்களும் நேற்று (12.02.2024) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் ssc.nic.in/ என்ற இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். Paper II தேர்வின் கட் ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் 568 பெண்களும், 6478 ஆண்களும் அடுத்த கட்ட தேர்வு முறையான Medical Exam-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!