SSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு!

0
SSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன்
SSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன்

SSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் SSC-CGL தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ஜன.19ம் தேதி நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 வருடங்களாக எவ்வித போட்டித்தேர்வுகளும் நடைபெறவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் வேலை வாய்ப்பை இழந்தோர் மீண்டும் வேலைகளை தேடி வருகின்றனர். மேலும் மத்திய மாநில அரசுகள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை நடத்தாததால் அரசுத்துறையில் காலிப்பணியிடங்களும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரசு வேலை வாய்ப்புகளை அளிக்க முன் வந்துள்ளது.

அந்த வகையில் போட்டித்தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு பணிகள் தேர்வாணையத்தின் குரூப்-B மற்றும் குரூப்-C பணி காலியிடங்கள் அடங்கிய SSC-CGL தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கான ஆன்லைன் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடலூர் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இந்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 19ம் தேதி திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ப நினைப்பவர்கள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆதார் கார்டு ஆகிய ஆவணத்துடன் நேரில் சென்று முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04142 290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்வர்கள் தேர்வை சிறப்பாக எழுத பயிற்சி பெறலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!