SSC CHSL தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – விண்ணப்பங்களை திருத்த நாளை கடைசி நாள்!!

0
SSC CHSL தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - விண்ணப்பங்களை திருத்த நாளை கடைசி நாள்!!
SSC CHSL தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - விண்ணப்பங்களை திருத்த நாளை கடைசி நாள்!!
SSC CHSL தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – விண்ணப்பங்களை திருத்த நாளை கடைசி நாள்!!

மத்திய அரசின் ஒருங்கிணைந்த உயர்நிலைத் (10+2) தேர்வுக்கு (SSC CHSL) விண்ணப்பிக்க கடந்த 4ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கு நாளையுடன் கால அவகாசம் முடிவடைகிறது.

SSC CHSL தேர்வு

மத்திய அரசின் துறைகளில் Lower Divisional Clerk/ Junior Secretariat Assistant, and Data Entry Operators ஆகிய பணியிடங்களில் காலியாக இருக்கும் சுமார் 4500 பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த உயர்நிலைத் (10+2) (SSC CHSL) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Computer Based Examination (Tier-I), Descriptive Paper and Skill Test/ Typing Test  (Tier-II) உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு.. கூடுதல் நேர வகுப்புகளுக்கு ஏற்பாடு – ஒடிசா அரசு அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

இதில் முதற்கட்டமாக கணினி வழித்தேர்வு (Tier-I) வருகிற பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து Tier-II தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 4ம் தேதியுடன் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்வை 12ம் வகுப்பு முடித்தவர்கள் எழுதலாம் என்பதால் நாடு முழுவதும் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு 5ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அத்துடன் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை திருத்துவதற்கு இன்று முதல் நாளை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் விண்ணப்பத்தார்கள் அனைவரும் ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உடனே திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notice PDF
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!